
Milk Fat Globule Membrane குழந்தை பருவத்தில் MFGM குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். இதை Lipids மற்றும் கரையும் கொழுப்பு புரதங்களின் சிக்கலான கலவை என்று அழைப்பதில் தவறில்லை. FRDC யின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் Paul Mc Jarrow வின் கூற்றுப்படி, “ Milk Fat Globule Membrane ” அல்லது Milk Fat Globule Membrane கேங்க்லியோசைடுகள் மற்றும் பாஸ்போலிப்பிட்களைக் கொண்டுள்ளது. மூளையின் செல்களில் கேங்க்லியோசைடுகள் மற்றும் பாஸ்போலிப்பிட்கள் ஆகிய இரண்டும் ஏராளமாக காணப்படுகின்றன. கேங்க்லியோசைடுகள் செல்களுக்கிடையில் (Cells) தகவல்தொடர்பாடல்களை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் அதே சந்தர்ப்பத்தில் பாஸ்போலிப்பிட்கள் நியூரோனல் சமிக்ஞைகளை பராமரிக்கவும் வேகப்படுத்தவும் உதவுகின்றன. எளிமையாகச் சொன்னால், Milk Fat Globule Membrane மூளை செல்களுக்கு இடையே சரியான தொடர்பாடலுக்கு உதவுகிறது. எனவே, குழந்தைகளின் இயல்பான உளவியல் விருத்திக்கு உதவும் DHA மற்றும் Milk Fat Globule Membrane உணர்ச்சி மற்றும் ஒழுக்கத்துக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. (Colombo, J., et al. 2023).
குழந்தைகளின் சிறு பராயத்தின் முழுமையான வளர்ச்சியில் 90% அவர்களின் முதல் 5 வயதில் இடம்பெறுகின்றன, எனவே அவர்களின் உளவியல் விருத்தியிலும் உடல் வளர்ச்சியிலும் மேலே குறிப்பிடப்பட்ட Milk Fat Globule Membrane(MFGM) பெரும் பங்கு வகிக்கிறது (nutritioninsight.com). குழந்தைகளின் உடல் வளர்ச்சி, உளவியல் விருத்தி, நோய் எதிர்ப்பு சக்தி, ஓடி ஆடி விளையாடி சுட்டித்தனமான விடயங்களில் ஈடுபடுவதற்கும் சமூகச் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை வழங்கவும் Milk Fat Globule Membrane பெரும் பங்களிப்பைச் செய்கிறது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூட அறிக்கையில், சாதாரண பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளை விட Milk Fat Globule Membrane அடங்கிய பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிக அறிவாற்றல் திறன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஒரு குழந்தையின் தாயாக இருந்தாலும், தாயாக தந்தையாக விரும்புபவர்களாக இருந்தாலும் Milk Fat Globule Membrane(MFGM) பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். 1 முதல் 5 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக வளர்ச்சியடைவதற்கு உளவியல் விருத்தி, நோய் எதிர்ப்பு சக்தி, சமூக செயல்பாடு, தகவல் தொடர்பு திறன் போன்ற முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பிற காரணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இவை அனைத்தையும் சமநிலையில் பேணுவதில் Milk Fat Globule Membrane மற்றும் DHA முக்கிய பங்கு வகிக்கின்றன (Xia, Y., et al. 2021). குட்டிச் சுட்டிகள் பெரியவர்களாக தங்கள் எதிர்காலத்திற்குத் தயாராக உதவுவதற்கு, அவர்களுக்குத் தேவையான சமநிறைவான ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
எனவே, சரியான ஊட்டச்சத்தை அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். முதல் 5 வருடங்கள் இதற்கு நீங்கள் சரியாகத் தயாராக இருக்க வேண்டும், மேலும் அறிவார்ந்த பெரியவர்களாகிய நாம் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துடன் ஆதரவளிக்கும் அதே வேளையில், சிறு குழந்தைகளின் ஆரம்பத்திற்கான புத்திசாதுர்யமான வழிகாட்டுதலையும் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

எனவே, குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, அவர்கள் சுயாதீனமாக முடிவெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மிகச் சரியான முழுநிறைவான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை பெறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் (Ellis. D, 2023). குறிப்பாக குட்டிச் சுட்டிகளின் முழுமையான வளர்ச்சியில் 90% அவர்களின் முதல் 5 வயதிற்குள் இடம்பெறுவதால். அது தொடர்பில் நீங்கள் சரியான முறையில் தயாராக இருக்க வேண்டும் என்பதுடன் இவ் விடயத்தில் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் அதே வேளை சுட்டிகளின் சிறந்த ஆரம்பத்திற்கான புத்திசாதுர்யமான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறதா என்பதையும் அறிவார்ந்த பெரியவர்களாக நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது(MFGM)
மனித பால் என்பது வளரும் குழந்தையின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிக்கலான மற்றும் தனித்துவமான ஊட்டச்சத்து ஆகும். ஆரம்பகால ஊட்டச்சத்து குறுகிய மற்றும் நீண்ட கால ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று அவதானிப்பு ஆய்வுகள் காட்டுகின்றன, ஃபார்முலா ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு அதிக எடையுடன் அதிக ஆபத்து உள்ளது, முதல் வருடத்தில் அதிக நோய்த்தொற்றுகள் மற்றும் குறைந்த அறிவாற்றல் மதிப்பெண்கள். மனித பாலில் இருந்து அத்தியாவசியமான கூறுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அடையாளம் காண்பது, மனித பால் மற்றும் குழந்தை சூத்திரங்களுக்கு இடையேயான செயல்பாட்டு இடைவெளியை மூடுவதற்காக, ஃபார்முலா ஊட்டப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து உத்தியை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானது.
References
- Colombo, J., et al. (2023) Improved Neurodevelopmental Outcomes at 5.5 Years of Age in Children Who Received Bovine Milk Fat Globule Membrane and Lactoferrin in Infant Formula Through 12 Months: A Randomized Controlled Trial. The Journal of Pediatrics. doi.org/10.1016/j.jpeds.2023.113483.
- nutritioninsight.com. (n.d.). MFGM marvel: Complex component in human milk linked to long-term cognitive benefits. [online] Available at: https://www.nutritioninsight.com/news/mfgm-marvel-complex-component-in-human-milk-linked-to-long-term-cognitive-benefits.html.
- Xia, Y., B. Jiang , L. Zhou, J. Ma, L. Yang, F. Wang, H. Liu, N. Zhang, X. Li, P. Petocz, and B. Wang. (2021), Neurodevelopmental Outcomes of Healthy Chinese Term Infants Fed Infant Formula Enriched in Bovine Milk Fat Globule Membrane for 12 month- A Randomized Controlled Trial. Asia Pacific Journal of Clinical Nutrition. https://apjcn.nhri. org.tw/server/APJCN/30/3/0091.pdf
- Ellis. D (2023). MFGM supplement in infant formula linked to long-term cognitive benefits. [online] News-Medical.net. Available at: MFGM supplement in infant formula linked to long-term cognitive benefits (news-medical.net)