Satyn New SIte (4)

Visa : இந்த விடுமுறைக் காலத்தில் இலங்கையில் ஆண்டு இறுதி சுற்றுலா பரிவர்த்தனைகள் 40% அதிகரித்துள்ளது

  • சுற்றுலாப் பயணிகளினால்  விற்பனை நிலையங்களில் டெபிட்  அட்டைகள்   பயன்பாடு பெருமளவில் அதிகரிப்பு (Tourist Transactions0
  • உள்நாட்டுப் பற்றுச் செலவுகள் 45% அதிகரித்துள்ள அதே வேளை  எல்லை தாண்டிய பற்றுச் செலவுகள் கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளன.
  • இலங்கையில்  உள்ள உள்நாட்டு அட்டைதாரர்கள் 2023 விடுமுறை காலத்துடன் ஒப்பிடும்போது  35%ற்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

கொழும்பு, பெப்ரவரி 05, 2025: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் விடுமுறைக் காலத்தில் இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரும் செலவழிப்பதில் Visa  குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக , டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய முன்னணியில் உள்ள  Visa (NYSE: V) இன்று அறிவித்துள்ளது.   Visaவின் ஆலோசனை அமைப்பான Visa ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு (VCA),  பிரிவானது, இந்த காலகட்டத்தில் நுகர்வோர் செலவு முறைகளின் ஏற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. இதற்கிணங்க வர்த்தகம் சார்ந்த கட்டணங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் இறுதி செலவினங்களின் பகுப்பாய்வில், டெபிட் அட்டைகளை பயன்படுத்துவதற்கான தெளிவான விருப்பம், கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது . முந்தைய ஆண்டை விட உள்நாட்டு அட்டை செலவினங்களில் 35% க்கும் அதிகமான அதிகரிப்பு இணையத்தளம் (~55%) மற்றும் விற்பனை நிலையங்களில்  (40% க்கும் அதிகமான) அதிக டெபிட் கார்டு செலவினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Visaவின் இலங்கை மற்றும் மாலைதீவு  நாடுகளுக்கான வதிவிட  முகாமையாளர் அவந்தி கொலம்பகே இது தொடர்பாக தெரிவிக்கையில், “இலங்கையர்கள் மற்றும் எங்கள் மதிப்புமிக்க சர்வதேச பயணிகளால் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Visa வின் , சக்தி வாய்ந்த கொடுப்பனவு முறை மூலம்  சூழலை எளிதாக்குவதிலும், விடுமுறை மற்றும் பயண அனுபவங்கள் தடையற்றதாகவும், வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், மற்றும் உண்மையிலேயே அனைவருக்கும் மறக்க முடியாததாகவும் இருப்பதை உறுதி செய்வதில் ஒருங்கிணைந்த பங்கை வகிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

2024 ஆம் ஆண்டில் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த நிலையில்  2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது  3 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த ஆண்டை விட டெபிட் மற்றும் கடனட்டைகளின்  மூலம் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில் 40% தெளிவான வளர்ச்சி ஏற்பட்டது. டெபிட் அட்டை  பயன்பாட்டில் 45% அதிகரிப்பு மற்றும் கடன் பயன்பாட்டில் 30% க்கும் அதிகமான வளர்ச்சி இதற்குக் காரணமாகும். இந்த வளர்ச்சியில் 50% க்கும் அதிகமானவை அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளால் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடக்கூடிய அம்சம் என்னவென்றால்  ஆப்கானிஸ்தான் மற்றும் பார்படாஸ் போன்ற குறைந்தது 13 புதிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை நாடு பதிவு செய்ததாகும்.

அவந்தி மேலும் இது தொடர்பாக சுட்டிக் காட்டுகையில் , “உல்லாசப் பயணிகளின் பெரும்பாலான செலவுகள் தங்குமிடம், விமான முன்பதிவுகள், உணவகங்கள், சில்லறை ஷொப்பிங் மற்றும் பிற பயணச் செலவுகள் போன்ற வகைகளில் காணப்படுகின்றன. இதற்கிடையில், உள்நாட்டு நுகர்வோர் செலவுகளில்  முதன்மையானதாக  உணவு மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள், உணவகங்கள் மற்றும் எரிபொருள் போன்ற அன்றாட செலவுகள் பங்கினை வகிக்கின்றன.

அவர் மேலும் தெரிவிக்கையில், “டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை ஏற்றுக்கொள்வதிலும்   விரைவுபடுத்துவதிலும்  நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் இலங்கையின் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். Visa  அனைத்து சுற்றுச்சூழலுடனும் கூட்டுறவைத் தொடர்கிறது. அத்துடன்  உள்நாட்டு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்துவதில்  புதுமை மற்றும் சிறப்பான முறையில் செயற்பட  உறுதியுடன் உள்ளது.

Visa Inc  பற்றி. (Tourist Transactions)

Visa(NYSE: V) என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள நுகர்வோர்,வர்த்தகர்கள் , நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு  இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் உலகில் முன்னணியில் திகழும் டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறையாகும். தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் செழிக்க உதவும் மிகவும் புதுமையான, வசதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டண வலையமைப்பு மூலம் உலகை இணைப்பதே Visaவின்  நோக்கம். எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள்,  மற்றும்  அனைவரையும் மேம்படுத்தி, பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும்  என்று Visa நம்புகிறது.

மேலும் தகவல்களுக்கு   Visa.com யை அணுகவும்.

தொடர்புகளுக்கு :

உமா பாலகிருஷ்ணன்

[email protected]

Tags: No tags