Leading Tamil women's magazine in Sri Lanka

கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான இளநீர் சர்பத்!

இப்பொழுது நாட்கள் மிகவும் வெப்பமாக உள்ளது. கோடை பருவம் தீவிரமாக தொடங்கியுள்ளதால், மனித உடலால் வெப்பத்தை நேரடியாக உணர முடிகிறது. சில இடங்களில் வெப்பநிலை எச்சரிக்கைக்கு மேல் சென்று விட்டது.

இவ்வாறு அதிக வெப்பம் நிலவும்போது, உடலை நீர்ச்சத்துகளுடன் பராமரிப்பது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். வெயிலின் தாக்கத்தால் வெளியேறும் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் சத்துக்களை உடலில் சமநிலையில் வைத்திருக்க, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீர் – கோடைக்காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு இயற்கை குடிநீர்

கோடைக்காலத்தில் தர்பூசணி, நுங்கு, மோர், பழச்சாறுகள் போன்றவை நம்மை குளிர்விக்க உதவும். ஆனால் இளநீர் போல இயற்கையான, உடலை hydrate செய்யும் ஒரு பானம் எதுவும் இல்லை.

மருத்துவர்கள் கூறுவதப்படி, இளநீர் களத்தில் அதிகமான பொட்டாசியம், சோடியம், கல்சியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் உள்ளன. இது வெயிலால் உண்டாகும் உடல் சோர்வு, நீரிழப்பு மற்றும் சூட்டை சமாளிக்க உதவுகிறது.

சிறந்த தேர்வு – இளநீர் சர்பத்! 🍸

இளநீரை மட்டுமல்லாமல், சில இயற்கையான பொருட்களோடு சேர்த்து சர்பத் ஆக மாற்றினால் அதன் சத்தும் அதிகரிக்கும், சுவையும் அதிகரிக்கும்!

தேவையான பொருட்கள்:

  • இளநீர் (தண்ணீர் மற்றும் ஜெல்லி பகுதி)
  • சப்ஜா விதைகள் (ஊறவைக்கப்பட்டது)
  • பாதாம் பிசின் (ஊறவைக்கப்பட்டது)

செய்முறை:

  1. முதலில் இளநீர் தண்ணீரையும், அதில் உள்ள வழுக்கை (ஜெல்லி) பகுதியையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பெரிய பாத்திரத்தில் இளநீர் தண்ணீர் மற்றும் ஜெல்லியை ஊற்றவும்.
  3. அதில் ஊறவைத்த சப்ஜா விதைகளையும், பாதாம் பிசினையும் சேர்க்கவும்.
  4. அனைத்தையும் நன்கு கலந்து பரிமாறலாம்!

இளநீர் போலவே சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசின் ஆகியவை உடல் சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. இது வெப்பக்காலத்தில் ஒரு பரிபூரண இயற்கை குடிநீராக மாறுகிறது.

குறிப்பு: வெப்ப காலத்தில் இளநீர் சர்பத்தை தினமும் ஒரு முறை குடிப்பது, உடலை refresh செய்யும் சிறந்த வழி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது.

Facebook
Twitter
Email
Print

Related article

Kubera
தமிழில் தோல்வி – தெலுங்கில் வெற்றி: குபேரா(Kubera) படத்தின் முழுமையான பார்வை

சமீப காலங்களில் தெலுங்கு சினிமா மற்றும் தமிழ் சினிமா இரண்டிலும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் “குபேரா”(Kubera). தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பிரபல நட்சத்திரங்களை ஒரே படத்தில் இணைத்திருக்கும் இயக்குநர்

Read More →
இயற்கையாக முகத்தை நிரந்தரமாக வெண்மையாக்க வேண்டும்? இதோ வழி!

பெண்கள் தங்களை naturally அழகாக பராமரிப்பது என்பது மிகவும் பாரம்பரியமானதும் முக்கியமானதும். அது வெறும் அடக்கங்காப்பு அல்ல – அது ஒரு தன்னம்பிக்கை, ஒரு ஆரோக்கிய மனநிலை. இதில் முகம் என்பது பெரும்பாலும் முதல்

Read More →