ஷொப்பிங்செய்பவர்கள்அதிகடிஜிட்டல்முறையில்செலவுகளை மேற்கொள்ளும்போது மோசடி செய்பவர்கள் நிதியியல் மோசடிகளால் பாதிக்கப்படக்கூடியவிற்பனை நிலையங்களின் விற்பனையாளர்களை தீவிரமாகத்தேடுகிறார்கள். வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுப்பனவு மோசடிகள்(Digital Scam) மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் பயனர்களைக் கூட விட்டு வைக்காது வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒருமுறை இதில் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து எப்படி வெளியேறுவது? நீங்கள்ஏமாற்றப்பட்டால், விரைவாகச் செயல்படவும், ஆபத்தைக் குறைக்கவும் Visa வழங்கும் ஐந்து பயனுள்ள உதவிக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன .
1. அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை மட்டும் அழைக்கவும்:
உங்கள் வங்கி அல்லது கட்டண வழங்குநரின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், அவர்களின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தொடர்பாக தொடர்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்ட தொடர்புகளை மட்டுமே நம்பி, உங்கள் கணக்கை முடக்கவும் அல்லது உங்கள் அட்டை/கட்டண முறையைத் தடுக்கவும். இது எந்த ஒரு மோசடி நடவடிக்கையையும் நிறுத்தவும் மற்றும் கட்டணம் மீளப்பெறுதல் அல்லது பணத்தை மீளப்பெறுதல் ஆகியவற்றைச் செயல்படுத்தவும் உதவும்.
2. தாமதமின்றி முறைப்பாடு செய்யவும் :
உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும் மற்றும் 0112381045 அல்லது பொலிஸ் தலைமையகத்தில் (+94 12421111) பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவிக்கவும். உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து அதன் நகலை கையில் வைத்துக் கொள்ளுங்கள்
3. ஒவ்வொரு விபரத்தையும் ஆவணப்படுத்துங்கள்!:
ஒரு மோசடி தொடர்பான குழப்பங்களுக்கு மத்தியில், பீதியடைந்து, முக்கியமான விபரங்களைக் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். இந்த மோசடி தொடர்பாக நீங்கள் சந்தேகிக்கும் தருணத்திலிருந்து விபரங்களை நினைவில் வைத்து எல்லாவற்றையும் ஆவணப்படுத்த முயற்சிக்கவும்; உரையாடலைப் பதிவுசெய்து, ஸ்கிரீன்ஷாட்களை எடுக்கலாம், ஏதேனும் செய்திகளை நகலெடுக்கலாம். மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்யும்போதும் மற்றும் தீர்வினை மேற்கொள்ள முயலும்போதும் இந்த விபரங்கள் விலைமதிப்பற்றதாக இருக்கும்.
4. உங்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும்:
கடவுச்சொற்களை வலுவான மற்றும் தனித்துவமானதாக மாற்றுவதன் மூலம் உங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இரு காரணி அங்கீகாரத்தை செயல்படுத்தவும் மற்றும் உங்கள் சாதனம்/களை தொடர்ந்து ஸ்கேன் செய்யும் வலுவான தீம்பொருளை உள்ளிடவும் நீங்கள் அதை இயக்கியதும், இணையத்தள பரிவர்த்தனைகளுக்கு மத்திய வங்கி கட்டாயப்படுத்திய டோக்கன் முறைமை போன்ற வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கட்டண தெரிவுகளை தேர்ந்தெடுக்கவும்.
5. பகிர்வு மற்றும் விழிப்பூட்டல்:
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிக்கு பலியாவது ஒரு சோதனையாக இருக்கலாம். உங்கள் அனுபவத்தை நண்பர்கள், குடும்பத்தினர், பெரியவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில், அத்தியாவசிய பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றும் நீங்கள் செய்த தவறினை எவ்வாறு சரி செய்தீர்கள் என்பதை முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதிகளவு விழிப்புணர்வோடு, நமது சாதனங்களைப் பாதுகாப்பதன் மூலமும், நமக்காக மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்காகவும் தகவல்களை அறிந்து விழிப்புடன் இருப்பதன் மூலம் பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.