டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக திகழும் Visaவானது (NYSE: V), இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு(Sinhala & Tamil New Year) பண்டிகைக்காலத்தை கொண்டாடவுள்ள இலங்கையில் உள்ள தங்கள் அட்டைதாரர்களுக்கு தொடர்ச்சியான சலுகைகளை வழங்கும் வகையில் ஒரு சிறப்பு பிரசாரத்தை அறிவித்துள்ளது.
Visaவின் இந்த புதிய பண்டிகை கால பிரசாரமானது டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு உள்ளார்ந்த பாதுகாப்பு மற்றும் வசதியை வலுப்படுத்தும் அதே வேளையில் நுகர்வோர் அனுபவத்தையும் மேம்படுத்தவுள்ளது. நுகர்வோர் தற்போது தமது பண்டிகை கால கொள்வனவுகளுக்கு பணம் செலுத்துவதற்கு தங்கள் Visa அட்டைகளை பயன்படுத்துவதுடன் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள முன்னணி வர்த்தக நிலையங்களில் சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
Visa வின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிட முகாமையாளர் அவந்தி கொலம்பகே இது தொடர்பாக தெரிவிக்கையில் , “சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் இந்த தருணத்தில், இலங்கையில் உள்ள மில்லியன் கணக்கான Visa அட்டைதாரர்களுக்கு அதிக பலனளிக்கும், தடையற்ற ஷொப்பிங் அனுபவங்களை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வர்த்தக பங்குதாரர்களின் விரிவான வலையமைப்பின்ஊடாக சில்லறை விற்பனை, உணவு, விருந்தோம்பல் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை தொடர்பாக சிறந்த சலுகைகளை வழங்குவதன் மூலம் , பண்டிகை கொள்வனவுகளுக்கு சிறந்த பெறுமதியை வழங்குவதே எமது குறிக்கோளாகும்.. நமது நாட்டின் வளமான கலாசாரம் மற்றும் மரபுகளுடன், எமது அட்டைதாரர்கள் எப்போது, எங்கு பணம் செலுத்தினாலும் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், இது Visa வின் கொண்டாட்டத்திற்கான ஒரு வழியாகவும் திகழ்கிறது.”
சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டானது எமது செலவுகளை அதிகரிக்கும் ஒரு காலமாக திகழ்கிறது. இக்காலத்தில் கொண்டாட்டங்கள் மற்றும் உணவு, பயணம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பிரிவுகளில் கொள்வனவுகள் அதிகரிப்பதன் மூலம் நுகர்வோரின் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இந்த பருவகால உத்வேகத்தையும் பண்டிகை உணர்வையும் பயன்படுத்தி , Visa அட்டைதாரர்கள் தமது கடனட்டை அல்லது டெபிட் அட்டை மூலம் பணம் செலுத்தும்போது மேலதிக பெறுமதியை வழங்க வடிவமைக்கப்பட்ட ஊக்குவிப்பு சலுகைகளின் தொகுதியை Visa விரிவுப்படுத்துகிறது.
வாடிக்கையாளர்கள் சலுகைகளைப் பெறக்கூடிய சில முன்னணி தேசிய மற்றும் சர்வதேச வர்த்தக நிலையங்கள் :
• உணவு: Chinese Dragon, The Mango Tree, Skrumptious, Arabian Vibes, Mitsi’s Delicacies
• பயணம்: Qatar Airways, Agoda,Visa Luxury Hotel Collection
• வாழ்க்கை முறை: Glomark, Stripes & Checks,Spring & Summer,Prasad Fashion, Scope Cinemas
Visaவானது வசதியான, பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் கட்டண அனுபவங்களுடன் விதிவிலக்கான நுகர்வோர் பெறுமதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதே வேளை, அதிகரித்த அட்டை அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மூலம் வர்த்தகச் சுற்றுச்சூழல் அமைப்பில் டிஜிட்டல் அணுகலை இதுசெயற்படுத்துகிறது.
இந்த முயற்சியானது, இலங்கையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துதல், நிதியியல் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் அதிகரித்த நுகர்வோர் ஈடுபாடு மற்றும் கொள்வனவு செய்யும் சக்தி மூலம் வர்த்தகர்களை பயனடையச் செய்தல் போன்ற Visaவின் பரந்த நோக்கத்துடன் இணைந்ததாக உள்ளது.
அனைத்து ஊக்குவிப்புச் சலுகைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பற்றி கீழே தரப்பட்டுள்ளது.

Visa பற்றி – Sinhala & Tamil New Year
Visa (NYSE: V) டிஜிட்டல் கட்டண செயற்பாடுகளில் உலகத் தலைவராக திகழ்வதுடன் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நுகர்வோர், வர்த்தகர்கள் , நிதியியல் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையே பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது. மிகவும் புதுமையான, வசதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டண வலையமைப்பு மூலம் உலகை இணைப்பதே எமது நோக்கம், Visaவானது தனிநபர்கள், வர்த்தகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் செழிக்க உதவுகிறது. எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் மேம்படுத்துவதுடன் மற்றும் பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கு அணுகலை அடித்தளமாககொண்டுள்ளதாக நாம் நம்புகிறோம். Visa.com இல் மேலும் தகவல்களை அறிக.