Leading Tamil women's magazine in Sri Lanka
ரவா உப்புமா

ரவா உப்புமா: The crackle of tempering, the embrace of taste

தமிழ் சமையலின் அடையாளங்களில் ஒன்று சைவ உணவு.
இது வெறும் உணவாக அல்ல; மரபு, நம்பிக்கை, மற்றும் நுண்ணிய சுவைச் சேர்க்கைகளின் ஒரு கலவையாக பார்க்கப்படுகின்றது. வெல்லம், தேங்காய், உளுத்தம் பருப்பு, கடுகு, மஞ்சள்; இவை அனைத்தும் சைவ சமையலின் அடிப்படை கூறுகள் ஆகும்.

சைவ உணவு தமிழர் வாழ்க்கை முறையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய சமையல் உலகில், சைவ உணவின் நுட்பங்கள், அதன் சுவைச் சீர்மை, மீண்டும் கவனத்தை பெறத் தொடங்கியுள்ளன. ஒரு பாரம்பரிய உணவாக மட்டுமல்ல; ஒரு கலாச்சாரப் பிணைப்பாகவும், ஒரு உணர்வுப் பிணைப்பாகவும் விளங்குகிறது.

அரிசி ரவா உப்புமா

அந்த அடிப்படையில் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இன்னும் ஒரு சைவ சமையல் குறிப்புடன், அரிசி ரவா உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

என்னடா “இந்த வாரம் உப்புமா செய்ய போறேன்” அப்படினு வந்துட்டாளே, வேற எதுவும் இவளுக்கு கிடைக்கவே இல்லையானு நீங்க நினைக்கலாம்.. வேற எதுவும் கிடைக்கல அப்படினு சொன்னா வீட்டுல உப்புமா தானே? சும்மா எதோ ஒரு ரோட்டு கடைல வாங்கி சாப்பிட்ட, இல்லைனா அவசரமா சமைச்ச boring ஆன உப்புமானு நினைச்சிடாதீங்க. இது அந்த soft-aa, flavour-full-aa பண்ணுற kind..

ரொம்ப கஷ்டம்லாம் இல்ல. ரொம்ப நாளா சாப்பிடலேன்னு feel பண்றிங்களா? அதாவது சுவையா, ஆரோக்கியமா boring இல்லாத உப்புமா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு feel பண்றிங்களா..? இத செய்து பாருங்க..

ரவா உப்புமா: தேவையான பொருட்கள்

1 கப் ரவா இட்லி
3 கப் தண்ணீர்
1 டீஸ்பூன் உப்பு
கொஞ்சமா தேங்காய் துருவியது
1 சிறிய துண்டு வெல்லம்

தாளிக்க தேவையான பொருட்கள்

2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
ஒரு சிட்டிகை பெருங்காயம்
1/2 டீஸ்பூன் கடுகு
2 உலர்ந்த சிவப்பு மிளகாய்
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 காய்ந்த கருவேப்பிலை கொத்து (Optional)

இந்தப் பொருட்கள் மட்டும் வைத்து, ஒரு சுத்தமான, சுலபமான செய்முறை

  1. முதல்ல, ஒரு non-stick கடாயில 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்துக்கலாம்.
  2. கடுகு தட்டும் சத்தம் கேட்டவுடன் போது, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உலர்ந்த சிவப்பு மிளகாய், கருவேப்பிலை என தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்துக்கோங்க. நல்லா வதக்கணும்.. வாசனை வரணும்..
  3. இப்போ 3 கப் தண்ணீர் சேர்த்துக்கலாம். கொதிக்க ஆரம்பிச்சதும், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து mix பண்ணனும்.
  4. தண்ணீர் rolling boil-ல இருக்கும்போது, அடுப்புல நெருப்பை கொஞ்சமா குறைச்சதுக்கு அப்புறம் 1 கப் ரவா இட்லியை மெதுவா சேர்த்து கிளறணும். lumps வராம careful-aa கிளறி எடுக்கலாம்..
  5. அதுக்குள்ளேயே, 1 சிறிய துண்டு வெல்லம் சேர்த்து அப்படியே கரைய விடணும்.
  6. கொஞ்சமா தேங்காய் துருவியது final touch. இது texture-க்கும் flavour-க்கும்.
  7. After all in together, மூடியால மூடி இரண்டு நிமிஷம் சமைக்கணும்.. அப்போதான் உப்புமா soft-aa set ஆகும்.
  8. அடுப்பை off பண்ணிட்டு எடுத்தா serve பண்ண ready! சட்னி இல்லாமலே சாப்பிடலாம்..

இதுல வெல்லம் சேர்த்தது இனிப்பா இருக்கணும் என்பதற்காக இல்ல.. கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கியதால் அவற்றினால் வரும் சிறிதளவு கசப்பான சுவையை balance செய்வதற்காக..

போனா வாரம் மிஞ்சின சாதத்தை வச்சு தக்காளி சாதம் பண்ணோம். இதுவும் அதே மாதிரி தான். மிஞ்சின இட்லிய வச்சும் செய்யலாம்.. இல்லையா அரிசி ரவா கொஞ்சமா எடுத்தும் செய்யலாம்..

ஒரு பாத்திரம், குறைந்த எண்ணெய், குழப்பமே இல்லாமல் 15 நிமிடங்களில் சமைத்திடலாம். பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடுகு என்பன சமிபாட்டிற்கு மிகவும் உகந்தவை. ரவா low glycemic index-ல் இல்லாவிட்டாலும், portion control-ல சாப்பிட்டால் உடலிற்கு balance கிடைக்கும்.

இது கவர்ச்சியான உணவு அல்ல, ஒரு அமைதியான உணவு. நாம் சோர்வாக இருக்கும்போது, தாமதமாக எழுந்திருக்கும்போது, அல்லது பழகிய சுவையை தேடும்போது முதலில் தோணும் உணவு.

ஒரு கைப்பிடி ரவா… பழைய ரேடியோ சத்தம் போல தாளிக்கும் ஓசை… மற்றும் recipe book இல்லாமவே தலைமுறை தலைமுறையாக வந்த ஒரு ரிதம்…

இன்னும் பல குறிப்புகள் மற்றும் திரை விமர்சனங்களுக்கு – https://snehidi.com/

Facebook
Twitter
Email
Print

Related article

Toxic உறவுகளைப் அடையாளம் காண்போம் - பாகம் 1: அடையாளம் காண்பது எப்படி?
Toxic உறவுகளைப் அடையாளம் காண்போம் – பாகம் 1: அடையாளம் காண்பது எப்படி?

அன்பான சிநேகிதி வாசகிகளே, இந்த மாதம் முதல் நாம் ஒரு முக்கியமான தொடரைத் தொடங்குகிறோம். “Toxic உறவுகளைப் அடையாளம் காண்போம்” என்ற தலைப்பில் ஆறு பாகங்கள் வெளியாகும். ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி

Read More →
தைப்பொங்கல் 2026: பாரம்பரிய பொங்கல் உணவு வகைகள்
தைப்பொங்கல் 2026: பாரம்பரிய பொங்கல் உணவு வகைகள்

தைப்பொங்கல் தமிழர்களின் முக்கியமான அறுவடைத் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 2026ஆம் ஆண்டு தைப்பொங்கல் ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. இவ்விழாவில் புதிய அரிசி, பால், வெல்லம்

Read More →