திரைகள், நம்பிக்கைகள், மற்றும் மௌனமான Cyber Threat: பெண்களுக்கு ஒரு முக்கியமான விழிப்புணர்வு
Cyber Threat -யின் தொடக்கமே “நம்பிக்கை தானே எல்லாமே” அப்படி என்று நினைப்பது தான். அந்த அன்பான நம்பிக்கை, ஒரு late-night “I miss you”-யில் அல்லது ஒரு emoji-யின் பின்னால் இருக்கலாம். திரையின் வழியாக வரும் அந்த நெருக்கம் உணர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் திரைகள் நோக்கங்களை கொண்டிருப்பதில்லையே. மனிதர்கள் தான் அவ்வாறான உணர்ச்சிகள் மற்றும் நோக்கங்களை கொண்டிருப்பவர்கள். மற்றும் சில நேரங்களில், அந்த திரையின் பின்னால் இருப்பவர், நீங்கள் நம்பும் அல்லது நினைத்துக்கொண்டு இருக்கும் நபராக இல்லாமலும் இருக்கலாம்.
ஒரு உறவில், ஒருவர் உங்கள் “private photos”-ஐ கேட்கிறார் என்றால், அது நெருக்கம் அல்ல. அது ஒரு digital red flag. அந்தக் கேள்வி எழும் தருணத்தில், அது காதலின் பெயரில் வெறும் கட்டுப்பாடாக மாறுகிறது. நீங்கள் இவ்வாறான ஒரு கட்டுப்பாட்டுக்குள் மூழ்கடிக்கப்பட வேண்டியவர் அல்ல.
இன்றைய AI தொழில்நுட்ப வளர்ச்சியில், சாதாரண புகைப்படங்களைக் கூட பகிர்வது ஆபத்தானதாக மாறியுள்ளது. உங்கள் முகம் deepfake-களில் பயன்படுத்தப்படலாம், உங்கள் அனுமதி இல்லாமல். இது கற்பனையல்ல, இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாமும் தினமும் பல photos மற்றும் videos-களை பார்த்து உண்மை என்று கூட நம்புகிறோம்.
இணையம்: அதன் எல்லைகள் எங்கே?
நாம் தினசரி scroll செய்கிறோம், share செய்கிறோம், ஆனால் இந்த இணையத்தின் முடிவுகள் பற்றி யாரும் கேட்கவில்லை.
உண்மையில் அதற்கு ஒரு எல்லையே இல்லை. Instagram Reels-யில் இருந்து WhatsApp Chats வரைக்கும் அனைத்தும் நுழைவது ஒரு இருண்ட இணையத்தளத்திலாகும். “Dark web” எனப்படும் அந்த இருண்ட பரிமாணத்தில், உங்கள் புகைப்படங்கள், உங்கள் தகவல்கள், உங்கள் தனியுரிமை, all are vulnerable. உங்கள் புகைப்படம் இவ்வாறான ஒரு நபரிடம் கிடைத்து விட்டால், அது copy செய்யப்படலாம், edit செய்யப்படலாம், நீங்கள் நினைத்தும் பார்க்காத ஒரு இடத்தில் பதிவேற்றப்படலாம். ஒரு screenshot, ஒரு hacked cloud, அல்லது ஒரு compromised device; all it takes.
Cyber Threat : ஒரு புகைப்படத்தின் விளைவுகள்
“அவன் அப்படி செய்ய மாட்டான்” என்பது இன்னும் பல பெண்களின் நம்பிக்கை. ஆனால் சைபர் குற்றங்கள் நம்பிக்கையை எதிர்பார்க்கவில்லை. அவை கவனக்குறைவின் மீது வளர்கின்றன. எப்போது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் Hackers-களின் விளையாட்டு மைதானம் அது.
ஒரு புகைப்படம், நம்பிக்கையின் அடிப்படையில் பகிரப்பட்டது, blackmail-ஆக மாறுகிறது. shame-ஆக மாறுகிறது. emotional trauma-ஆக மாறுகிறது. சில பேர் மனதளவில் உடைந்து போகின்றார்கள். சிலர் அமைதியாக தங்கள் வாழ்வை முடித்துக் கொள்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அமைதி அந்த abusers -களுக்கு இன்னும் வழியை கொடுக்கும் தவிர, உங்களுடைய வலிக்கு மருந்தை தராது.
Pollachi case! Tamil Nadu-வில் நடந்த அந்த சம்பவம், 200க்கும் மேற்பட்ட பெண்களை பாதித்தது. அவர்கள் online-ல் trap செய்யப்பட்டார்கள், assault செய்யப்பட்டார்கள், video-வாக பதிவு செய்யப்பட்டார்கள். அந்த video-கள் blackmail-க்கு பயன்படுத்தப்பட்டது. 2025 மே மாதத்தில், 9 பேர் life imprisonment கொடுக்கப்பட்டார். ஆனால் அந்த நீதிக்கு முன்னால், பல வருடங்கள் trauma, leaked videos, outrage மற்றும் போராட்டங்கள்.
இங்கே Sri Lanka-வில், ஒரு இளம் ஆண் தனது காதலியின் private photos-ஐ பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டார். நீதிமன்றம் அதை ஒரு பாரிய குற்றமாக கருதி அவரது bail-ஐ நிராகரித்தது. இது ஒரு முக்கிய turning point, சட்டம் விரைவாகவே victims-ஐ பாதுகாக்க ஆரம்பித்திருக்கிறது.
“இல்லை” என்று சொல்லும் உரிமை
“இல்லை” என்பது ஒரு boundary, not a rejection.
ஒருவர் உங்கள் தனிப்பட்ட புகைப்படங்களை கேட்கிறார் என்றால்,
- “நான் comfortable இல்ல” என்று சொல்லலாம்.
- “நான் என் privacy-ஐ மதிக்கிறேன்” என்று சொல்லலாம்.
- “நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால், மீண்டும் கேட்க வேண்டாம்” என்று சொல்லலாம்.
உங்கள் உடல் ஒரு favor அல்ல. affection-க்கு currency அல்ல. Boundaries-ஐ மதிக்க தெரியாமல் வளர்க்கப்பட்ட ஒருவரை மாற்றுவது உங்கள் பொறுப்பு அல்ல. உங்கள் பாதுகாப்பு தான் உங்களுடைய முன்னுரிமை.
நீங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால்?
உங்களுடைய புகைப்படம் already leak செய்யப்பட்டு அல்லது நீங்கள் blackmail செய்யப்பட்டிருந்தால்?
முதலில்: அமைதியாக இருங்கள். நீங்கள் தனியாக இல்லை!
- Cyber Crime Division அல்லது உள்ளூர் காவல்துறை-க்கு உடனடியாக புகார் அளிக்கவும்.
- Evidence-ஐ பாதுகாக்கவும்; screenshots, messages, timestamps.
- Abuser-ஐ நேரடியாக எதிர்கொள்ள வேண்டாம். சட்டம் அதை கையாளட்டும்.
- Sri Lanka’s Bail Act No. 30 of 1997 மற்றும் ஏனைய அனைத்து Cybercrime statutes-ஐ பயன்படுத்தவும். இப்போது சட்டம் மிகுந்த கடினமானதாக மாறியுள்ளது இவ்வாறான நபர்களுக்கு எதிராக.
- நம்பிக்கையுள்ள நபர் அல்லது மனநல ஆலோசகர்-ஐ அணுகவும்.
Pollachi case மற்றும் Sri Lankan verdicts என்பன மூலம் புரிந்துகொண்ட மிக முக்கிய விடயம் தான், Cyber Threat -ஆல் பாதிக்கப்பவர்களின் emotional trauma-ஐ சட்டம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. Survivors பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நீதியும் பின்னால் வர ஆரம்பித்திருக்கிறது.
ஒரு தோழியாக உங்களுக்கு ஒரு நினைவூட்டல்
பெண்கள் என்பவர்கள் expressive, emotionally intelligent, and bold. ஆனால் நம்மிடமுள்ள அந்த openness, vulnerability-ஆக மாறக்கூடாது.
எந்த புகைப்படம் என்றாலும் பகிரும் முன், இந்தக் கேள்விகளை உங்களுக்குள் கேளுங்கள்:
- இந்த photo ஒரு stranger-இன் inbox-இல் போனால், நான் okay-யா?
- இந்த திரையின் பின்னால் உள்ள நபரை நான் உண்மையிலேயே நம்ப வேண்டுமா?
- என் எதிர்கால version-ஐ நான் பாதுகாக்கிறேனா?
நாம் deserve பண்ணுவது:
- Respect, not requests.
- Privacy, not pressure.
- Love, not leverage.
அவர் “just one pic” கேட்கிறார் என்றால், உங்கள் dignity download-க்கு இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Stay safe. Stay informed. Stay kind to yourself first.
மேலும் இது போன்ற முக்கியமான பதிவுகளை வாசிக்க – https://snehidi.com
நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் topics-ஐ எங்களது சமூக வலைத்தளங்களின் மூலமாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம் – https://www.instagram.com/snehidi?igsh=MnB0cmo0MWFldmJp