Leading Tamil women's magazine in Sri Lanka

ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து ஏன் அவளை மதிப்பிட வேண்டும்….

நாம் வாழும் சமூகம் எவ்வளவு மாறினாலும் நம் மனநிலைகள் இன்னும் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகிறது. உடை எண்பது உடலை மறைப்பதற்கே அதனால் எல்லோரும் (குறிப்பாக பெண்கள்) உடலை மறைத்தவாரே உடை அணிய வேண்டும் என்கிறார்கள்(Why judge a woman) “அது என்ன அந்த குறிப்பாக பெண்கள்” ஏன்னென்றாள் ஆண்களை விட பெண்கள் கவர்ச்சிகரமானவர்கள் இதனால் ஆண்கள் பெண்களை பார்த்து சபலப்பட கூடும் அதனால் பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்கிறார்கள் .

WAIT A SECOUND….

WHO ARE YOU….

ஆம் யார் நீங்கள்….?
Why judge a woman

இவ்வளவு கரிசனையுடன் எங்கே இருந்தீர்கள் இவ்வளவு காலமாக என தோன்றுகிறது. நான் ஏன் இன்னொருவரின் சொற்களை கேட்டு அவர்களிற்கு பிடித்தாற் போல் வாழ வேண்டும் என்க்கு பிடித்த ஆடைகளை அணிய நான் யாருடைய அனுமதி வாங்க வேண்டும்.. இல்லை உங்கள் இஷ்டப்படி உங்களை ஆடை அணிய விட முடியாது. கவர்ச்சிகரமான ஆடை அணியும் பெண்கள் மேல் சபலப்பட்டு கற்பழிக்கும் ஆண்கள் பல உள்ளனர் அதனால் நீ உன்னை பாதுகாத்துக்கொள் என்று கூறியபடி ஒரு கூட்டம் இருக்கிறது….

இந்தியவில் 4 வயது பெண் குழந்தை முதல் 87 வயதான பாட்டி வரை கற்பழிக்கப்பட்டு உள்ளார்கள் இச் சம்பவங்களுக்கு காரணம் அவர்கள் அணிந்திருந்த ஆடை என்று கூற முடியுமா(Why judge a woman).

இங்கு பிரச்சனை அணியும் ஆடையில் இல்லை பார்க்கும் பார்வையிலேயே உள்ளது. சில பெண்கள் இவர்களின் கதைகளினை பொருட்படுத்தாமல் அவர்களிற்கு பிடித்த ஆடைகளை அணிந்து அவர்களிற்கு பிடித்தது போல வாழ்ந்து வருகிறார்கள்.. அப்படிப்பட்ட பெண்களை நடத்தை கெட்டவள் என்ற பட்டத்தை இலகுவாக கொடுக்கிறோம்…அவள் சரி இல்லை அவள் அணியும் ஆடையை பார்த்தாலே தெரியவில்லையா அவள் எப்படிப்பட்டவள் என்று…. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை  அது எப்படி ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து அந்த பெண் எப்படிப்பட்டவள் என்று முடிவு செய்கிறார்கள்.

அந்த அளவிற்கு அறிவுத்திறன் கூடிய சமூகமாக வளர்ந்துவிட்டோமா என்ன..?

உடனே வயது போனாலே இப்படித்தான் யாரையும் குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்று அவர்கள் மேல் பழியை போட வேண்டாம் நான் சொல்வது அனைத்தும் இன்றைய தலைமுறையினருக்கே..

ஒரு பெண்ணை பற்றிய வதந்தியினை விரைவாக பரப்பி விடுகிறார்கள் அதனால் அவள் அனுபவிக்கும் வலிகளினை குறித்த கவலை யாரிடமும் இல்லை…அவள் அப்படித்தான் என்று விட்டு கடந்து செல்கிறார்கள்…

நாம் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்-Why judge a woman
Why judge a woman

அவர்களிற்கு தங்கள் இஷ்டப்படி ஆடை அணிவதற்கு முழு சுகந்திரம் உண்டு. இல்லை நீ இதனை அணியலாம் இதனை அணியக்கூடாது போன்ற கட்டளைகளை இடுவதற்கு  நாம் யார்..? இதுவும் ஒரு வகையான அடக்குமுறையை  என்பதனை நாம் நினைவுகொள்ள வேண்டும்.. ஒரு பெண்ணை அடித்து உதைத்து துன்புறுத்துவது மட்டுமே அடக்குமுறையாகாது ஒரு பெண் விரும்பாத ஒன்றை அவளுக்கு திணிப்பதும் அவளிற்கு மனதளவில் கொடுக்கக்கூடிய அடக்குமுறையே…. பெண்களிற்கு எதிரான அடக்குமுறைகள் அனைத்தும் ஒழிந்து இன்று பெண்கள் (Why judge a woman) சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்று வாய்மொழியாய் கதைக்கலாம்  ஆனால் இன்றும் பெண்கள் பல அடக்குமுறைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள் அன்று உடலால் அனுபவித்தார்கள் இன்று மனதால் அனுபவிக்கின்றார்கள்…

பெண்கள் வெளிப்படுத்த முடியாத பல பிரச்சனைகளிற்கு முகம்கொடுக்கின்றார்கள் , வெளி இடங்களில் சந்திக்கின்ற பிரச்சனைகளை குறித்து விட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் அவர்களின் முதற் கேள்வி உன்னை யார் அந்த இடத்திற்கெல்லாம் போக சொன்னது, இனி நீ எங்கும் செல்லத்தேவையில்லை என்பதுதான் இதற்கு பயத்திலேயே பல பெண்கள் தமது பிரச்சனைகளை வீட்டில் சொல்வதில்லை. எந்தப் பிரச்னையும் வந்தாலும் எங்கள் வீட்டுப்பெண்ணை நாங்கள் இனுக்கிறொம் என்ற நம்பிக்கைறை கொடுங்கள்,அச்சமின்றி பேச இளம் பெண்களை ஊக்கம் கொடுங்கள் இந்த சமூகம் ஆண்களுக்கு மட்டும்மல்ல பெண்களிற்குமானது(Why judge a woman) என்று சொல்லிக்கொடுங்கள். அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, நாம் உங்களுடைய இருக்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுப்போம்.

பெண்களை கடவுளாக பாருங்கள் என்று கூறவில்லை அவர்களை சக மனுஷியாக பாருங்கள் அவ்வளவு தான்.
Facebook
Twitter
Email
Print

Related article

இயற்கையாக முகத்தை நிரந்தரமாக வெண்மையாக்க வேண்டும்? இதோ வழி!

பெண்கள் தங்களை naturally அழகாக பராமரிப்பது என்பது மிகவும் பாரம்பரியமானதும் முக்கியமானதும். அது வெறும் அடக்கங்காப்பு அல்ல – அது ஒரு தன்னம்பிக்கை, ஒரு ஆரோக்கிய மனநிலை. இதில் முகம் என்பது பெரும்பாலும் முதல்

Read More →
இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்: இலங்கையில் இன்று என்ன வழிகள் திறந்திருக்கின்றன?

இன்று இலங்கையின் பல இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார சிக்கல்கள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் ஆகியவை இளம் தலைமுறையை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளன(Career opportunities).

Read More →