Leading Tamil women's magazine in Sri Lanka
வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகள்

வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் சமாளித்தல் – தில்ஷி சந்துனிகாவுடன் ஒரு மனிதவளக் கண்ணோட்டம் – HR Omega Line Ltd

வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் நூற்றுக்கணக்கான பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனையாகும். மாதவிடாய் என்றால் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்வதற்கும், அதைச் சுற்றியுள்ள உரையாடல்களை எளிதாக்குவதற்கும், நிறுவனங்களில் உள்ள மனிதவளத் துறைகள் (HR Departments) முக்கிய பங்கு வகிக்கின்றன; அதே நேரத்தில் அதிக அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன.

வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபெம்ஸ் (fems) உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற தில்ஷி சந்துனிகா (HR of Omega Line Ltd) உடனான எங்களுடைய கலந்துரையாடல். வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஆரோக்கியமான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க இன்னும் பல வேலைத்திட்டங்களை செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்.

1). வேலை செய்யும் இடத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

வேலை செய்யும் இடத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் கவனிக்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாங்கள் வேலைத்தளங்களில் சமமாக நடத்தப்பட வேண்டும், உடல் மற்றும் உள ஆரோக்கியம் என்பவற்றில் பெரும்பாலும் கவனம் செலுத்தினாலும், இன்னும் பல ஊழியர்களுக்கு அத்தியாவசிய மாதவிடாய் பொருட்களை அணுகக் கூடிய வழிமுறைகளுக்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இது ஒரு அடிப்படைத் தேவையாகும், அதாவது இந்த தேவை பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஊழியர்களின் வரவு, செயல்திறன் மற்றும் அவர்களது சுயமரியாதை என்பன பாதிக்கப்படலாம். இவ்வாறான கவனயீனம், ஆதரவும் ஊக்கமும் தேவைப்படும் புதிய பெண் ஊழியர்களுக்கும் பாதகமாக இருக்கலாம்.

2). மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் தனிப்பட்ட அல்லது தொழில்முறை அனுபவங்கள் ஏதேனும் உண்டா?

என்னுடைய தொழில்சார் பயணத்தில், சக பெண் ஊழியர்கள் அடிப்படையான அந்த மாதவிடாய் பொருட்களை அமைதியாகக் கேட்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் மாதவிடாய் பொருட்களை பெற்றுக்கொள்ள வழி இல்லாமை அல்லது அசௌகரியம் காரணமாக வேலையை முன்கூட்டியே விட்டுச் செல்ல வேண்டிய சந்தர்ப்பங்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்த சந்தர்ப்பங்கள், பொதுவில் அரிதாகவே பேசப்பட்டாலும், பல பெண்கள் சுமக்கும் அமைதியான சுமையாகவே எடுத்துக்காட்டபடுகின்றன.

3). வேலையில் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியம் என்ன?

விழிப்புணர்வை ஏற்படுத்துவது எதிர்மறையான எண்ணங்களை உடைத்து, புரிந்துணர்வுள்ள ஒரு நிறுவன சூழலைக் கொண்ட கலாச்சாரத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் மாதவிடாய் சம்மந்தமான விழிப்புணர்வானது அதை ஒரு சாதாரண செயல்முறையாக கருதி அனைவரையும் சமமாக நடத்தக்கூடிய முயற்சியாகவும் வேலை செய்யும் இடத்தில் கண்ணியத்தை ஊக்குவிப்பதாகவும் அமைகின்றது.

4). இந்த தலைப்பு தொடர்பாக வேறு ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா?

மாதவிடாய் பிரச்சினைகளைச் சமாளிப்பது என்பது பொருட்களை விநியோகிப்பது மட்டுமல்ல – அது சம்மந்தமாக இருக்கக் கூடிய மனநிலையை மாற்றுவது பற்றியதுமாகும். தலைமைத்தும் ஏற்றுக்கொள்வது, திறந்த உரையாடலை உருவாக்குவது (Open Talk) மற்றும் மாதவிடாயை ஒரு தடைசெய்யப்பட்ட தலைப்பாக (Taboo) இல்லாமல் ஒரு சுகாதாரப் பிரச்சினையாக பார்ப்பது ஆகியவை அதன் முக்கிய படிகளாகும். நாம் மாதவிடாய் பிரச்சினைகளை சிந்தனையுடன் கையாளுவதால், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஆதரவளிப்பதாகவும் இருக்கும் வேலை செய்யும் இடங்களை உருவாக்குகிறோம்.

இந்த படிமுறைகளை நாம் உருவாக்கித் தொடரும்போது, சமூகத்திலும் வேலை செய்யும் இடத்திலும் மாதவிடாய் பற்றிய எதிர்மறையான விம்பத்தைப் பற்றிய கதையை மாற்ற முடியும் என்று அவர் மேலும் கூறினார். இது தொடர்பாக இன்னும் பல நடவடிக்கைகள் செய்யப்பட முடியும் என்று அவர் நம்புகிறார், மேலும் ஒவ்வொரு வேலை செய்யும் இடமும் மாதவிடாய் பிரச்சினை மற்றும் அதன் தீர்வுகள் குறித்த திறந்த உரையாடலுக்கு முன்வர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் வேலை செய்யும் இடங்களில் மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பல பெண்களின் எண்ணங்களை தில்ஷி எதிரொலிக்கிறார். இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளும்போது சக ஆண் ஊழியர்கள், வேலையில் மாதவிடாய் பிரச்சினைகளைக் கையாளும் பெண் ஊழியர்களுக்கு உண்மையில் உதவியாளர்களாக மாறலாம்.

மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் வரலாம். மாதவிடாய் என்பது இயற்கையாகவும், எந்தவித இடையூறும் இல்லாமல் கையாளப்பட வேண்டிய ஒரு இயல்பான உடல் செயல்முறை என்பதை நாம் புரிந்துகொள்ளும்போது அந்த மாற்றம் நிகழ்கிறது. ஒரு முக்கிய தேசியப் பிரச்சினையான இதைப் பற்றி கலந்துரையாட வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும், முன்னுரிமையாகக் கையாளப்பட வேண்டும்.

Facebook
Twitter
Email
Print

Related article

பகல் நேர சோர்வை குறைக்கும் 5 முக்கிய உணவுப் பொருட்கள்
பகல் நேர சோர்வை குறைக்கும் 5 முக்கிய உணவுப் பொருட்கள்

5 முக்கிய உணவுப் பொருட்கள் | இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில், பலருக்கும் பகல் நேரத்தில் தூக்கமாகவும் சோர்வாகவும் உணர்வது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. அலுவலக வேலை, கல்வி, குடும்ப பொறுப்புகள் என பல

Read More →
காதல், நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின் மீது பெற்றோர்களின் தாக்கம்: குடும்பத்தில் காண்பதுதான், வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுப்பதா?
காதல், நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தின் மீது பெற்றோர்களின் தாக்கம்: குடும்பத்தில் காண்பதுதான், வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுப்பதா?

ஒரு குடும்பம் என்பது வெறும் உறவுகளின் கூடாரம் அல்ல. அது ஒரு பசுமையான பாடசாலை ஆகும். பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்கள் பேசும் வார்த்தைகளை மட்டும் அல்லாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் நடத்தை, மௌனங்கள், சிரிப்புகள்,

Read More →