“இணையத்தில் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்” என்று நாம் அனைவரும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், நம்மில் பெரும்பாலானோர் அதனை செவிமடுப்பதில்லை. நமக்கு எல்லாமே நன்றாகத் தெரியும் என்று நினைத்துக்கொள்கின்றோம். நம்மிடம் பேசுபவர்களை பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறோம். இணையத்தில் ஒரு பிரச்சினையில் அகப்பட மாட்டோம் என்று நினைத்துக்கொள்கின்றோம்.
உண்மை என்னவென்றால், இணையத் தளங்கள்தான் நாம் வாழும் இடமாக மாறியுள்ளது. நாம் நண்பர்களை தேடிக்கொள்கின்றோம், சிலர் துணையைக்கூட தேடிக்கொள்கின்றனர், தொழில் வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்கின்றனர், திரைகள் வழியாக நம் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு திரைக்குப் பின்னாலும் ஒரு நபர் அல்லது சில நேரங்களில், பல நரர்கள் இருக்கலாம். அங்குதான் அனைத்தும் சிக்கலாகின்றன.
இது பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கூறப்படவில்லை. இது விழிப்புணர்வைப் பற்றியது. நம்மைப் பாதுகாக்கும், நம்மை மேம்படுத்தும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு, குறிப்பாக நம் சகோதரங்கள் மற்றும் நண்பர்களுக்கு இதைப் பற்றிய தெளிவை ஏற்படுத்த உதவும் வழிகளில் ஒன்று தான் நாங்கள் இணையத்தள தொடர்புகளில் எவ்வாறான எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும்.
அறிவின் மாயை
நாம் விழும் மிகப்பெரிய பொறிகளில் ஒன்று, இணையத்தில் ஒருவரை “தெரியும்” என்று நினைப்பதுதான். ஒருவேளை அவர்கள் வாரக்கணக்கில் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை அவர்கள் ஒவ்வொரு கதைக்கும் உடனேயே கருத்து தெரிவிக்கலாம். ஒருவேளை அவர்கள் எல்லாவற்றையும் சரியாகச் சொல்லலாம். ஆனால் இணையம் மக்களை அவர்களுக்கென்று முகமூடிகளை உருவாக்க அனுமதிக்கிறது. அவர்கள் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாமல், தங்கள் நோக்கங்களை மறைக்கவும், உங்களுடைய நம்பிக்கையை சாதகமாக பயன்படுத்தவும் முடியும்.
மேலும் இவ்வாறானவர்கள் அந்நியர்கள் மட்டுமல்ல. சில நேரங்களில் இணையத்திற்கு வெளியே வாழ்க்கையில் நமக்குத் தெரிந்தவர்களும் இணையத்தில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம், அல்லது நாம் தனிப்பட்டவை என்று நினைத்து பேசிய விடயங்களை வெளியில் பகிரலாம். திரை மக்களுக்கு தூரத்தைக் காட்டுகிறது, சில சமயங்களில், அந்த தூரம் நாம் மனிதர்கள் என்பதை முழுமையாக மறக்கச் செய்கிறது.

இணைப்பு மற்றும் கட்டுப்பாடு
இணைய இணைப்பு பரஸ்பரமாக இருக்கும்போது அழகாக இருக்கும். ஆனால் ஒருவர் கதையை கட்டுப்படுத்தத் தொடங்கும்போது அது ஆபத்தானதாக மாறும். யாராவது தொடர்ந்து புகைப்படங்களைக் கேட்டால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்பினால், அல்லது நீங்கள் வேகமாக பதிலளிக்காதபோது கோபப்பட்டால் அது அன்பு அல்லது கருணை என்று நினைத்துவிட வேண்டாம். அதுதான் கட்டுப்பாடு.
மேலும் இணைய கட்டுப்பாடு விரைவாக அதிகரிக்கக்கூடும். மனதளவில் ஒரு வகையான பயத்தை உணர்வதில் இருந்து நேரடியாகவே அவர்கள் மிரட்ட தொடங்கும் வரை, உரையாடல்கள் அனைத்தும் சுமூகமாகவே இருக்கும். அதனால்தான் நம்மை நாமே அடிக்கடி சரிபார்க்க வேண்டும்:
- இதைப் பகிர்வதில் எனக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?
- நான் நலமாக இருப்பேனா?
- நான் மதிக்கப்படுகிறேனா, அல்லது பயன்படுத்தப்படுகின்றேனா?
உங்களுக்கே உங்களால் பதில் கூறமுடியாமல் இருந்தால், அது நீங்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமாகும்.
பிரசங்கம் இல்லாமல் ஒரு சகஜமான உரையாடல்
நம் சகோதரர்களிடம், “தெரியாதவர்களிடம் இணைய வழியான உரையாடலில் கவனமாக இரு” என்று மட்டும் சொல்ல முடியாது. அவர்கள் அதை முரண்பாடில்லாமல் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை! அதற்கு பதிலாக, பிரச்சினையை எவ்வாறு கண்டறிவது என்பதை நாம் அவர்களுக்குக் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். முன்னரே தெரிவித்து இருந்தும் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்ட பிறகு அதை அவமானமாக நினைக்காமல் யாரிடம் உதவி கேட்பது, அல்லது அதை எவ்வாறு வெளிப்படையாக உதவிகோரால் உரையாடலாக மாற்றுவது என்பதை பற்றிய தெளிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.
ஏனென்றால் அவமானம்தான் மக்களை அமைதியாக வைத்திருக்கிறது, குறிப்பாக பெண்கள். குறிப்பாக தப்பிப் பிழைத்தவர்கள். அவர்கள் நினைக்கிறார்கள், “நான் அவர்கள் கூறியதை ஆரம்பத்திலேயே கேட்டிருக்க வேண்டும்.“
ஆனால்… இல்லை! பிரச்சினை வந்த பிறகு பழி சுமத்துவது பற்றியதாக ஒரு போதும் உரையாடல்கள் அமையக்கூடாது. உதவி கேட்பதை சங்கடமாக இல்லாமல் சாதாரணமாக உணரும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
எனவே உங்கள் நண்பர், “நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கூறும்போது, தீர்ப்பளிக்காதீர்கள். அவர் சொல்வதையும் கேளுங்கள். கேள்விகளையும் கேளுங்கள். ஆதரவை வழங்குங்கள். இப்படித்தான் நாங்கள் அவமானப்படுத்தும் அல்லது அவமானம் என நினைக்கும் கலாச்சாரத்தை மாற்றுகிறோம்.

இணையத்தில் எல்லைகளும் உண்மையான எல்லைகள் தான்
நிஜ வாழ்க்கையில் எல்லைகள் பற்றி நாம் நிறைய பேசுகிறோம்; இடம், சம்மதம், சுயமரியாதை என்பவற்றை எல்லாம் பேசுகின்றோம். ஆனால் இணைய எல்லைகளும் அதே அளவு முக்கியத்துவம் வழங்குகின்றோமா என்று கேட்டால்? நிச்சயமாக இல்லை.
- நீங்கள் அதிகாலை 2 மணிக்கு யாருக்கும் இணையத்தில் பதில் சொல்ல வேண்டியதில்லை.
- உங்கள் இருப்பிடத்தை தெரியாதவர்களுக்கு பகிர வேண்டியதில்லை.
- அவர்கள் நன்றாகக் கேட்டார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு புகைப்படத்தை அனுப்ப வேண்டியதில்லை.
இணையத்தில் எல்லைகளை நிர்ணயிப்பது உங்களை வித்தியாசமாக நடத்தாது. அது உங்களைப் பாதுகாப்பாக ஆக்குகிறது. மேலும் அந்த நடத்தையை நாம் மாதிரியாகக் காட்டும்போது, மற்றவர்களும் அதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
சட்டம் மெதுவாக கடமையைச் செய்கின்றது..
இலங்கையின் இணைய பாதுகாப்புச் சட்டம் ஒரு படி முன்னேறியுள்ளது. இது மக்கள் சைபர்புல்லிங் (Cyber Bullying), அவதூறு மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் (Content) புகாரளிக்க அனுமதிக்கிறது. ஆனால் பலருக்கு அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லை அல்லது அதை சட்டத்துக்கு கொண்டு சென்று பேசுவதன் விளைவுகளைப் பற்றி தேவையில்லாமல் அஞ்சுகிறார்கள்.
அதனால்தான் விழிப்புணர்வு முக்கியமானது. பள்ளிகளில் மட்டுமல்ல, அன்றாட உரையாடல்களிலும். உடல் பாதுகாப்பு பற்றி நாம் பேசுவது போலவே டிஜிட்டல் பாதுகாப்பு பற்றி பேசுவதையும் இயல்பாக்க வேண்டும். ஏனென்றால் இணையம் ஒரு அன்றாட பாவணையாக மாறியுள்ளது.
எனவே நாம் என்ன செய்ய முடியும்?
இன்றே நாம் என்ன செய்யத் தொடங்கலாம்:
- எல்லோரையும் விட்டு ஒதுங்க முற்படும் அல்லது பதட்டமாகத் தோன்றும் நண்பர்களுடன் வெளிப்படையாக பேசுங்கள்.
- சகோதரர்களிடம் அவர்கள் என்ன பார்க்கிறார்கள், பகிர்ந்து கொள்கிறார்கள், உணர்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுங்கள்.
- தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் உங்களைப் பற்றியது இல்லாவிட்டாலும் அதைப் புகாரளிக்கவும்.
- எல்லைகளை அமைத்து அவற்றைப் பின்பற்றுங்கள்.
- ஹெல்ப்லைன்கள் (Helplines), சட்டம் அல்லது பாதுகாப்பான தளங்கள் போன்ற ஆதாரங்களைப் பகிரவும்.
- ஏதாவது தவறாக உணரும்போது பேசுங்கள். அது சங்கடமாக இருந்தாலும் கூட.

முடிவு: நாங்கள் வெறும் பயனர்கள் அல்ல.. நாங்கள் வழிகாட்டிகள்!
நாங்கள் வெறும் இணைய பயனர்கள் அல்ல. நாங்கள் வழிகாட்டிகள். அடுத்த தலைமுறை இந்த இடத்தை எவ்வாறு வழிநடத்துகிறது என்பதை வடிவமைப்பவர்கள் நாங்கள்தான். அதாவது நாம் செயலற்றவர்களாக இருக்க முடியாது. “என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அதை அப்படியே விட்டுவிட முடியாது.
ஏனென்றால் சில நேரங்களில், அந்த மனப்பான்மைதான் நம்மை சிக்க வைக்கிறது.
எனவே விழிப்புணர்வுடன் இருப்போம். எச்சரிக்கையாக இருப்போம். கனிவாக இருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, வேறு யாராவது உதவி கேட்கும் அளவுக்கு பாதுகாப்பாக உணருவதற்கு காரணமாக இருப்போம். 🙂
__________________________________________________________