ஒரு குடும்பம் என்பது வெறும் உறவுகளின் கூடாரம் அல்ல. அது ஒரு பசுமையான பாடசாலை ஆகும். பிள்ளைகள் எப்போதும் பெற்றோர்கள் பேசும் வார்த்தைகளை மட்டும் அல்லாமல், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் நடத்தை, மௌனங்கள், சிரிப்புகள், சண்டைகள், மற்றும் தியாகங்களை கவனிக்கிறார்கள். இவை அனைத்தும், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து, எதிர்காலத்தின் மீது அவர்களுடைய பார்வையை வடிவமைக்கின்றன.
தமிழ் குடும்பங்களில், பெரும்பாலும் உணர்வுகள் வெளிப்படையாக பேசப்படுவதில்லை. ஆனால், பிள்ளைகள் உணர்வுகளை உணர்கிறார்கள். சிலர் பரிவும் புரிதலும் கொண்ட அன்பான உறவுகளைப் பார்த்து வளர்கிறார்கள். ஆனால் சிலர்.. கட்டுப்பாடு, புறக்கணிப்பு அல்லது தீராத மனவலிகளைப் பார்த்து வளர்கிறார்கள். இவை, அவர்களின் எதிர்கால உறவுகள், நம்பிக்கை மற்றும் அனைத்தின் மீதும் தாக்கம் செலுத்துகின்றன.

பெரியவர்கள் ஆன பிறகு, இந்த அனுபவங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன
நாம் பார்த்ததை அடிப்படையாகக் கொண்டு, பல நேரங்களில் நாம் உறவுகளை அணுகுகிறோம். சிலர், “பழக்கமான” உணர்வுகளை தேடுகிறார்கள்.. Even if that includes emotional neglect or control. சிலர், நெருக்கத்தைத் தவிர்க்கிறார்கள், அவர்கள் பெற்றோர்களைப் போலவே நடந்து கொள்வார்கள் என்ற பயத்தில் விலகியிருக்க முயற்சிக்கின்றனர்.
நாம் “சிறந்த” துணையாக இருக்க முயற்சிக்கலாம். அல்லது, காதல் என்பது ஏமாற்றத்துடன் முடிவடையும் என்ற எண்ணத்தால், உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். நம்முடைய தொழில் தேர்வுகள், நட்பு வட்டங்கள், சுயதன்னம்பிக்கை அனைத்தும் வீட்டில் பார்த்த அனுபவங்களால் பாதிக்கப்படலாம்.
இது பலவீனத்தின் அறிகுறி என்று நினைத்து விடக்கூடாது. இது சிறிய வயதிலிருந்து பார்த்து வளர்ந்த மனநிலை வடிவமைப்பு. ஆனால் மனநிலை நிச்சயமாக மாறக்கூடியது.
மாற்றத்தின் முதல் படி? விழிப்புணர்வே ஆரம்பம்!
மாற்றம் என்பது குற்றம் சுமத்துவதால் உண்டாகாது. மாறாக அந்த விடயத்தை அழகான முறையில் தெளிவுபடுத்துவதால் உண்டாகும். நாம் என்ன பார்த்தோம்? அது எதை கற்றுக்கொடுத்தது? நாம் எதை உண்மையில் மறக்க விரும்புகிறோம்?
தமிழ் குடும்பங்களில், உணர்வுகள் குறித்து வெளிப்படையாக பேசுவது அரிதாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் அவசியமான ஒன்றாகும். Counselling, அல்லது வெளிப்படையாக நம்பிக்கை உள்ள ஒருவரிடம் அல்லது நேரடியாக வீட்டில் உள்ளவர்களிடம் இதை பற்றி பேசுவது மிகவும் முக்கியமான ஒரு முயற்சியாகும். பெற்றோர்கள் பெரும்பாலான தமிழ் குடும்பங்களில் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை விட்டுவிடுகின்றார்கள். அப்படி இல்லாமல் அவர்கள் நடவடிக்கைகளை வைத்து நேரடியாக அவர்கள் பேசுவதற்கான வழியை அமைத்துக்கொடுப்பது மிக முக்கியமாகும்.
நாமும் இவ்வாறான தன்மை உணர்வு அல்லது குடும்பத்தின் பிரதிபலிப்பால் ஏற்பட்ட மனநிலையை வெளிப்படையாக பேசுவதை அவமதிப்பாக நினைக்கக்கூடாது. இது தைரியத்தின் அறிகுறி ஆகும். இது நாம் கேள்வி கேட்கும் வாய்ப்பை மற்றும் நமக்குள்ளேயே சில முடிவுகளை ஏற்படுத்த தைரியத்தை உருவாக்குகிறது. “இந்த முடிவு உண்மையில் என்னுடையதா, இல்லையெனில் நான் பார்த்து வளர்ந்த சூழலின் எதிர்வினையா?” என நமக்குளேயே கேட்டு ஒரு முடிவுக்கு வருவது முக்கியமான படியாகும்.
உங்கள் மதிப்பீடுகளை பிரதிபலிக்கும் வாழ்க்கையை உருவாக்குவது
நாம் பார்த்ததை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் மதிப்பும், உரையாடலும், உணர்வுப் பாதுகாப்பும் கொண்ட உறவுகளை தேர்ந்தெடுக்கலாம். Even when tradition makes it feels difficult. இது நமது வளர்ந்த சூழ்நிலையில் இருந்து நாம் வெளியில் வந்த வெற்றியைக் குறிக்கலாம். Not as perfection, but as peace.
நாம் வளர்ந்த சூழல் அப்படித்தானே எனவே நாமும் அப்படியே நமது பிள்ளைகளை வளர்க்கலாம் என்று உங்களுடைய தலையில் சுமத்தப்பட்ட அந்த தேவையில்லாத பண்பாட்டுச் சுமையை காலம் முழுக்க சுமக்க வேண்டியதும் இல்லை. அதை உங்கள் பிள்ளைகளுக்கும் சுமையாக கொடுக்க தேவையில்லை. ஒரு விடயம் உங்களை சுற்றி தவறாக நடப்பதை உணரும் போது அது பற்றி கலந்துரையாடுங்கள்.

வெளிப்படையாக பேசுங்கள். சிறு வயதில் அது பற்றி தெரியாத வயதில் பெற்றோரிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் நீங்கள் இருந்திருக்கலாம். ஆனா பெரியவர்கள் ஆன பிறகும் அந்த சூழ்நிலையில் அமைதியாக அல்லது பயத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பயம் என்பது ஒரு காலம் மரியாதை என்று பொருள்படாது. அவர்களை அழைத்து அமைதியாக பணிவாக உங்களுடைய பிரச்சினையைக் கூறுங்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த வகையில் தெளிவு படுத்துங்கள். அல்லது நீங்கள் முதலில் ஒரு நம்பிக்கையான நபரை அணுகி இது பற்றி நல்ல ஒரு தீர்வுக்கு வந்துவிட்டு பெற்றோரிடம் பேசுங்கள்.
வெளிப்படையாக பெற்றோரிடம் இது பற்றி கலந்துரையாடும் போது அவர்களும் அதை விளங்கிக்கொண்டு இருக்கும் மீதி மாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்து வாழ முயற்சிக்கலாம்.
பாரம்பரியம்: நாம் விட்டுச்செல்லும் விடயங்கள் முக்கியம்
நாம் பெற்றோர்களாக மாறும்போது, பழைய தேவையற்ற பண்பாடுகளை முறியடிக்கும் வாய்ப்பு நம்மிடம் வருகின்றது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். பிள்ளைகள் எப்போதுமே வெளிப்படையாக உணர்வை வெளிப்படுத்தும், மன்னிக்கத் தயாராக இருக்கும், மற்றும் நிலையான பரிவைக் காட்டும் பெற்றோர்களால் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள்.. அவர்களுடன் கண்ணியமான அன்பான உணர்வை பேணுகின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்கள் வெளியில் அவர்களுக்கான அன்பைத்தேடிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில் அவ்வாறு வெளியில் கிடைக்கும் அன்பை தேடிச்சென்று ஆபத்தில் சிக்குவதே பெரும்பாலாக நடக்கின்றது.
தமிழ் கலாச்சாரத்தில், கடமைகள் ஆனது உணர்வு வெளிப்பாட்டை மிஞ்சும் சூழலில், இந்த மாற்றம் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால் மரியாதை என்பது கட்டுப்பாட்டால் மட்டுமல்ல, பரிவு அன்பு மற்றும் வெளிப்படையாக முகம் கொடுத்து பேசுவது கணிவாக பேசுவது என்பற்றாலும் வரும்.

சிந்தனை: எப்போதுமே பெற்றோர்களின் வழியை தேர்ந்தெடுக்க வேண்டுமா?
நாம் இவ்வாறான toxic relationships பார்த்து வளர்ந்துவிட்டோம் என்பதற்காக அதே வட்டத்துக்குள் வாழ வேண்டும் என்று வரையறுக்கப்படவில்லை. நாம் அவற்றை அனுபவித்ததால் சிறு வயதிலேயே உடைந்துவிட்டோம் என்பதில்லை. நாம் அவற்றை மாற்ற முடியும்.
மாற்றம் என்பது நம் பண்பாட்டையோ காலாச்சாரத்தையோ மறுப்பது என்பது அல்ல. அது ஒரு புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதாகும். நமக்கு ஏற்பட்ட மன ரீதியான பாதிப்பை நமது பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது என்று நமக்கு நாம் செய்துகொள்ளும் சத்தியமாகவும் இருக்கலாம். சிந்தித்து செயற்படுவோம்.