Leading Tamil women's magazine in Sri Lanka
ஜீன்ஸ் (1998) படத்தில் ஐஸ்வர்யா ராய்: 90களின் ஃபேஷன் செல்வாக்கு

ஜீன்ஸ் (1998) படத்தில் ஐஸ்வர்யா ராய்: 90களின் ஃபேஷன் செல்வாக்கு

1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டுமல்ல, ஃபேஷனின் புதிய பரிமாணத்தையும் காட்டியது. ஆனால், அந்தப் பரிமாணத்தின் மையத்தில் இருந்தவர் “ஐஸ்வர்யா ராய்“. அவருடைய மதுமிதா கதாபாத்திரமானது, 90’s kids ஆக வளர்ந்த பல பெண்களுக்கு ஒரு ஃபேஷன் வழிகாட்டியாக மாறியது. அந்தக் காலகட்டத்தில் “ஸ்டைலிஷ்” என்ற வார்த்தைக்கு அவர் ஒரு முகமாக இருந்தார்.

இந்தப் படத்துக்காக சில உடைகள் அவருக்காகவே தனிப்பயனாக்கப்பட்டன. குறிப்பாக “பூவுக்குள்” பாடலில், உலகின் பல்வேறு கலாச்சார ஆடைகளையும் அவற்றை வரலாற்றில் இருந்து ஆய்வு செய்து நுணுக்கமாக சித்தரித்து இருந்தார்கள் படக்குழுவினர். ஒவ்வொரு தோற்றத்திலும் தனித்துவம் காட்டப்பட்டது. அந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அரசிகளின் ஓவியங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்தக் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்ட உடைகள், தமிழ் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கின.

90களின் ஃபேஷன் சின்னம் – ஐஸ்வர்யா ராய்

ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா அணிந்த ஒவ்வொரு உடையும், அந்தக் காலத்தின் ஃபேஷன் டிரெண்ட்களை அமைத்தது. High-waisted jeans with tucked-in blouses, Pastel salwar suits with minimal embroidery, Half-sarees, Crop tops with long skirts; இவை அனைத்தும் கல்லூரி மாணவிகள், நகர்ப்புற பெண்கள் மத்தியில் விரைவில் பிரபலமானது. அவர் காட்டிய ஃப்யூஷன் பாணிகள், மேற்கத்திய நாகரீகத்தையும் இந்திய கலாச்சாரத்தையும் இணைக்கும் விதமாக இருந்தது.

அவருடைய ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்களும் அந்த காலத்தின் அழகு தரக்கோல்களாக மாறின. மென்மையான அலைகள் போன்ற சிகை அலங்காரம், உயரமான போனிடெயில், பக்கவாட்டு பின்னல்; இவை அனைத்தும் திருமண விழாக்கள், கல்லூரி நிகழ்ச்சிகளில் பெண்கள் முயற்சித்த பயணிகளாக மாறின. அவரது கண்கள் எப்போதும் ஒப்பனையின் மையமாக இருந்தன; கண்ணுக்கு மை (kohl), பழுப்பு நிறத்திலான shadows, முழுமையாகவே இயற்கையான மேக்கப், all minimal, yet expressive with just kohl and kajal.

அவருக்காகவே வடிவமைக்கப்பட்ட உடைகள்

இந்தப் படத்துக்காக சில உடைகள் ஐஸ்வர்யாவுக்காகவே உருவாக்கப்பட்டன. Easwari Rao மற்றும் டிசைனர் Neeta Lulla ஆகியோர், அவரது உடல் அமைப்புக்கும், கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு உடையையும் வடிவமைத்தனர். இது தமிழ் சினிமாவில் “custom couture” என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது.

அவருடைய fashion , கதையின் ஒரு பகுதியாக இருந்தது. அமெரிக்கா மற்றும் இந்திய ஆடைகளை modesty ஆக, பாரம்பரியத்தையும், நவீனத்தையும் சமநிலைப்படுத்தும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இது 90’s kids-களாக வளர்ந்த பெண்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை சொன்னது: “நீங்கள் கலாச்சாரத்தையும், நவீனத்தையும் ஒரே நேரத்தில் அணியலாம்.”

இன்னும் தொடரும் செல்வாக்கு

25 ஆண்டுகள் கடந்தும், ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் காட்டிய ஃபேஷன் இன்னும் பேசப்படுகிறது. Kollywood ஃபேஷன் வரலாற்றில் இது ஒரு முக்கியமான கட்டமாக உள்ளது. Instagram, Pinterest போன்றவை இல்லாத காலத்தில், அவர் காட்டிய ஒவ்வொரு பாணியும், பெண்களின் மனதில் பதிந்தது.

அவருடைய ஃபேஷன், அழகு பற்றிய பார்வையை மாற்றியது. அது வெறும் “பார்க்க அழகாக இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தைவிட, “அணியும் ஆடை மூலமாக கூட modesty ஆன அழகை வெளிப்படுத்தலாம்” என்ற எண்ணத்தை உருவாக்கியது.

Media Trial & Victim Blaming - ஊடக விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுதல் : “Media Trial & Victim Blaming – ஊடக விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுதல்

Facebook
Twitter
Email
Print

Related article

ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்பட வெளியீடு: தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் தற்போதைய நிலை
ஜனநாயகன் (Jana Nayagan) திரைப்பட வெளியீடு: தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் தற்போதைய நிலை

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) திரைப்படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என

Read More →
கப்பா மற்றும் மீன் குழம்பு - கேரளாவின் பாரம்பரிய உணவு
கப்பா மற்றும் மீன் குழம்பு – கேரளாவின் பாரம்பரிய உணவு

மழை தூறும் கேரளாவின் பசுமையான நிலப்பரப்பில், தலைமுறை தலைமுறையாக பகிர்ந்து மகிழப்படும் ஒரு அற்புதமான உணவு கலவை தான் கப்பா மற்றும் மீன் குழம்பு. இந்த எளிமையான ஆனால் சுவையான உணவு, கேரளாவின் கடலோர

Read More →