Leading Tamil women's magazine in Sri Lanka
மசாலா தோசை

மசாலா தோசை: A Heritage in Every Fold

பாரம்பரியமும், சத்தும், சுவையும் ஒன்றாகக் கலக்கும் ஒரு காலை உணவுப் பொக்கிஷம்.

மசாலா தோசை-னா என்ன தெரியுமா?
அது வெறும் உருளைக்கிழங்கு தோசை இல்ல…
அது ஒரு vibe.. ஒரு feel.. ஒரு வேற-level breakfast.

வெளிப்புறம் crisp-ஆகவும், உள்ளே soft-ஆகவும் இருக்கும் தோசை, புளிக்க வைத்த மாவின் நுட்பம், soft-ஆ smash பண்ணின உருளைக்கிழங்கு masala,
கடுகு தாளிக்குற sound, அந்த dosa fold பண்ணுற moment… sema satisfying. இது சைவ சமையலின் ஒரு shining example, மரபும் நவீனமும் சேரும் இடம்.

தேவையான பொருட்கள்

தோசை மாவுக்காக:
  • பச்சரிசி – 2 கப்
  • உளுத்தம் பருப்பு – ½ கப்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர்
மசாலா (பூரணம்) காய்கறிக்காக:
  • உருளைக்கிழங்கு – 3 (மூடி வேகவைத்தது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  • இஞ்சி – சிறிதளவு (துருவியது)
  • கடுகு – ½ டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சில
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • எண்ணெய் – 1–2 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • லெமன் ஜூஸ் – விருப்பப்படி

மசாலா தோசை செய்முறை

தயாரிப்பு itself ஒரு சடங்கு. பொறுமையும், பாசமும் தேவைப்படும் இந்த சமையல், ஒரு உணவாக மட்டுமல்ல; அது ஒரு பாரம்பரியச் செயலாகவே பார்க்கப்படுகிறது.

1). மாவு தயார் செய்தல்
  • அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஒன்றாக ஊற வைத்து grind பண்ணி எடுத்துக்கலாம்.
  • 6 – 8 மணி நேரம் புளிக்க விடணும்.. அதனால தான் அம்மா night-லயே இந்த மாவு எல்லாம் grind பண்ணி வச்சுப்பாங்க..
  • எந்த அளவுக்கு ferment பண்றோமோ அந்த அலவ்க்குக்கு மாவு நல்ல soft-ஆ இருக்கும்..
  • காலைல உப்பு சேர்த்து நல்லா கலக்கி எடுக்கலாம்.
2). மசாலா (பூரணம்) தயாரித்தல்
  • Pan-ல எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மஞ்சள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கணும்..
  • வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கலாம்..
  • வேகவைத்த உருளைக்கிழங்கை நசுக்கி சேர்த்து, உப்பு, கொத்தமல்லி, லெமன் ஜூஸ் கொஞ்சமா விட்டு கிளறி எடுத்துக்கலாம்..

மசாலா soft-ஆவும் aromatic-ஆவும் இருக்கணும்..

3). தோசை சுடுதல்
  • தோசைக்கல்லில் அல்லது தட்டில் மாவை ஊற்றி சுற்றி பரப்பவும்.
  • எண்ணெய் தெளித்து crisp-ஆ சுடவும்.
  • மசாலா பூரணத்தை நடுவில் வைத்து மடக்கவும்.

அரிசியும் உளுந்தும் சேர்ந்து, நீரின் துணையோடு அரைக்கப்பட்டு, புளிக்க வைக்கப்படும் அந்த செயல்முறை, ஒரு சமையல் சடங்காகவே பார்க்கப்படுகிறது. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நிம்மதி தரும் ஒரு செயல்.

மசாலா பூரணம் என்பது வெறும் உருளைக்கிழங்கு அல்ல. அதில் சேரும் மஞ்சள், பெருங்காயம், இஞ்சி, மற்றும் கடுகு; all have medicinal value. வயிறு நன்கு ஜீரணமாக, உடல் சீராக இருக்க, இந்தத் தாளிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இது தான் சைவ சமையலின் தனிச்சிறப்பு; சுவை மட்டும் அல்ல, நலம் கூட.

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்ற இது எல்லாமே நல்ல combo தான்.. Plain-ஆ சாப்பிட்டாலும், masala dosai never disappoints. இது வீட்டுச் சமையலிலிருந்தும், பாரம்பரிய உணவகங்களிலிருந்தும், தலைமுறைகளை கடந்தும் தொடரும் ஒரு உணவுப் பாரம்பரியம்.

மசாலா தோசை பெரும்பாலும் காலை உணவாகவே பரிமாறப்படும். ஆனால் functions-ல, temple feast-ல, அல்லது even train travel-ல கூட, இது ஒரு crowd-favorite. அல்லது lazy Sunday brunch; மசாலா தோசை fits every mood. தோசையின் crispiness, பூரணத்தின் softness, மற்றும் சட்னி-சாம்பாரின் warmth; all come together to create a complete experience.

அம்மா சுடும் தோசையில் ஒரு care இருக்கும். அப்பா சாப்பிடும் போது ஒரு silent approval இருக்கும். குழந்தைகள் fold பண்ணி சாப்பிடும் போது ஒரு playful joy இருக்கும். இது தான் உணவின் உண்மை அர்த்தம், not just taste, but shared memory.

தாய்மார்களின் கைச்சுவையும், காலச்சுவையும் ஒன்றாகக் கலந்த ஒரு சுவையான உணவு… இன்றைய வேகமான வாழ்வில், இந்த தோசையின் மடக்கங்கள் நமக்கு ஒரு பாடம் சொல்லும்.. பொறுமை, பாசம், மற்றும் பகிர்வு என்பவை எப்போதும் காலம் கடந்தவை. அதனால்தான், ஒரு உணவு பரிமாறும் தருணம், ஒரு உணவுப் பரிமாற்றம் மட்டுமல்ல; ஒரு மரபை வாழ்த்தும் செயல்.

நவீன சமையல் முறைகளில், மசாலா தோசை (Masala Dosai) இன்னும் shining example.
Air fryer-ல dosa crisp பண்ணுறவங்க இருக்காங்க,
vegan version-ல butter avoid பண்ணுறவங்க இருக்காங்க.
ஆனா base philosophy remains the same:
simple ingredients, soulful preparation, and a plate that speaks tradition.

இது போன்ற மேலும் பல தென்னிந்திய சமையல் குறிப்புகளுக்கு – https://snehidi.com/

Facebook
Twitter
Email
Print

Related article

மசாலா தோசை
மசாலா தோசை: A Heritage in Every Fold

பாரம்பரியமும், சத்தும், சுவையும் ஒன்றாகக் கலக்கும் ஒரு காலை உணவுப் பொக்கிஷம். மசாலா தோசை-னா என்ன தெரியுமா?அது வெறும் உருளைக்கிழங்கு தோசை இல்ல…அது ஒரு vibe.. ஒரு feel.. ஒரு வேற-level breakfast. வெளிப்புறம்

Read More →
JSK: Janaki V v/s State of Kerala
JSK: Janaki V v/s State of Kerala (2025) – ஒரு பெண்ணின் குரல்

JSK: Janaki V v/s State of Kerala | சில படங்கள் உங்களை சிரிக்க வைக்கும்.சில படங்கள் சிந்திக்க வைக்கும். இது உங்களை உங்களுக்குள் அழவைக்கும். ஒரு பெண், தன்னை கைவிட்ட அமைப்புகளையே

Read More →