தக்காளி சாதம் – வீட்டில் இருந்து வேறு பகுதிக்கு சென்று வேலை அல்லது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு துரிதமாக தயாரிக்க கூடிய பல ஆரோக்கியமான தென்னிந்திய உணவுகளின் பட்டியலில் இருந்து இந்த வாரம் ஒரு உணவு.
விதவிதமான தென்னிந்திய உணவுகள் இருந்தாலும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சைவ உணவுகள் தான். ஆரோக்கியம் என்று பார்க்கும் போதும் அந்த உணவுகள் தான் முதல் இடத்தில் இருக்கும்.
என்னதான் வகை வகையா சாப்பிட்டாலும் நம்ம அம்மா சமைச்சு கொடுக்குற அந்த சாப்பாட்டோட அருமை எல்லாம் வீட்டை விட்டு வெளில போனா மட்டும்தான் தெரியும்.
காலைல வேலைக்கு நேரத்தோட போகணும், ஆனா சமைக்க ரொம்ப நேரமும் எடுக்கக்கூடாது? அது எப்படி முடியும்?
முதல் நாள் ராத்திரி மிஞ்சி போன சாதம் இருந்திச்சுனா, அத வச்சு இந்த தக்காளி சாதம் செய்துபாருங்க.
தேவையான பொருட்கள்:
- சாதம்
- தக்காளி
- கடுகு & உப்பு
- கறிவேப்பிலை
- பச்சை மிளகாய் & சின்ன வெங்காயம்
- சிறிதளவு எண்ணெய்
- இஞ்சி & பூண்டு (Optional)
- மிளகாய்த்தூள் (Optional)
செய்முறை:
- முதல் நாள் ராத்திரி மிஞ்சி போன சாதம் எடுத்துக்கலாம். இல்லையா? அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- எடுத்துக்கிட்ட காய்கறி எல்லாம் அளவாக வெட்டிக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.
- சிறிதளவு இஞ்சி & பூண்டு சேர்த்துக்கொள்ளவும். (Optional)
- வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும். (Optional)
- உப்பு சேர்த்து வெட்டிய தக்காளியையும் சேர்த்து வதங்கவிடவும்.
- பின்னர் சமைத்த சாதத்தை சிறிது சிறிதாக தக்காளி மசாலா கலவையில் சேர்த்து சமைத்து எடுக்கவும். அல்லது ஊற வைத்த அரிசியை வடித்து எடுத்து தக்காளி மசாலா கலவையில் சேர்த்து தேவையான அளவு நீர் அரிசி வேகும் வரை சேர்த்து சமைத்து எடுக்கவும்.
அவ்வளவு தான். மதியத்துக்கு சாப்பாடு தயார். இவங்க ஏன் முக்கியமா தக்காளி சாதம் பத்தி சொல்றாங்கனு நீங்க யோசிக்கலாம். மேல சொல்லி இருக்குற மாதிரி மிஞ்சின சாதத்தை வச்சு இருந்தா, நிறைய காய்கறி இல்லாததனால் சீக்கிரமாவே எல்லாம் வெட்டி எடுத்துக்கிட்டு, எல்லாமே ஒரே பாத்திரத்தில சமைச்சுக்கலாம். இதுக்கு கூட வேற எதுவும் சமைக்கணும்னு இல்லை. இது சமைக்குறதுக்கு வேற வாசனை பொருட்கள் (Spices) எல்லாம் வேணும்னு அவசியமும் இல்லை.
சம்பாதிக்குறதோ இல்ல படிக்கிறதோ, எதிர்காலத்துல நம்ம நல்லா இருக்கணும்னு தானே. அப்படினு சொன்னா நம்ம சாப்பிடுற சாப்பாட்டுல சுவை மட்டும் இல்ல, ஆரோக்கியமும் இருக்கணும். அதுக்கு தான் இந்த ஆரோக்கியமான தென்னிந்திய உணவு.
இதே போல மேலும் பல குறிப்புகள் மற்றும் ஆக்கங்களுக்கு, எங்களுடைய வளையத்தளத்தை பார்வையிடவும்: https://snehidi.com/