Leading Tamil women's magazine in Sri Lanka

தொழிலதிபர் ஆகும் பெண்கள் வணிகத்தை எப்படி கையாள்கிறார்கள்

இன்று, அதிகமான பெண்கள் புதிதாக ஒரு தொழிலை ஆரம்பிக்க விரும்புகிறார்கள். அப்படி ஆரம்பிக்கும்  பெண்கள் இச் சமுகத்தினால் பல சவால்களிற்கும் முகம்கொடுக்கின்றார்கள். அந்த சவால்களை எல்லாம் தகந்தெறிந்து சில பெண்களே வெற்றி கண்டு தங்கள் துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

Women Entrepreneurs

பல நிறுவனங்களில் பெண்களுக்கு அரிதாகவே மூன்றாம் நிலை உயர் பதவிகளை வழங்குகின்றன. ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே பெண்களை சமமாக நடத்தி அவர்களிற்கு  தலைமை நிர்வாக அதிகாரி(Women Entrepreneurs) அந்தஸ்து வழங்குகிறார்கள் . பல தொழில்களில் எவ்வளவு தான் கஸ்டப்பட்டு  உழைத்தாலும்  உயர் பதவிகளிற்கான  பதவி உயர்வு அதிகமான பெண்களிற்கு கிடைப்பதில்லை அவ்வாறான உயர் பதவிகளை பெறுவதற்கு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

இலங்கையில் புதிய தொழில்களை ஆரம்பிப்பதற்கான ஆர்வம் பெண்களிடையே பரவலாக அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களின் ஆர்வம் செயலாக்கம் பெறாமலேயே முடிவடைகிறது, சிலர் அவர்களின் ஆர்வத்தை நடைமுறை படுத்தி தங்களுக்கு தேவையான சரியான வழிகாட்டலை பெற்று வெற்றியை நோக்கி பயணிக்கின்றார்கள் தொழில்முனைவு மூலம் கடந்த இரண்டு. தசாப்தங்களில் பெண் தொழிலதிபர்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தங்கள் தொழிலில் முன்னேறும் வழி தங்களுக்கென்று ஒரு சுய தொழிலை தங்கள் சுய வழியில் நடத்துவதன் மூலம் மட்டுமே.

இலங்கையில் சுமார் 4.9 மில்லியன் பெண்கள் தங்கள் சொந்த, வியாபாரத்தை நடத்துகிறார்கள். இது மற்ற பெண்களுக்கும் நல்லது, ஏனெனில் பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்ற திறமையான பெண்களை உயர் பதவிகளில் அமர்த்த தயங்க மாட்டார்கள். எனவே இது ஒரு வெற்றி நிலை. சிறந்த அம்சம் என்னவென்றால், பெண்கள் தொழில் அதிபராக மிகவும் வெற்றிகரமான வணிகங்களை நடத்துகிறார்கள்.

பெண்கள் உலகளவில் தொழில் தொடங்குகிறார்கள்

Women Entrepreneurs

பெண் தொழிலதிபர்கள்(Women Entrepreneurs) அதிகரிப்பதற்கான இந்த போக்கு அமெரிக்காவிலும் ஐரோப்பா போன்ற பிற மேற்கத்திய நாடுகளிலும் மட்டுமே சாத்தியம் என்று நீங்கள் கருதலாம். ஆனால் அது உண்மையல்ல. இலங்கை போன்ற  வளரும் நாடுகளில் உள்ள சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குச் சொந்தமானது, இது பாரம்பரியவாதிகளின்  எதிர்பார்ப்புகளைத் தகர்க்கிறது. கவலைக்குரிய ஒரு உண்மையான விடயம். மத்திய கிழக்கு ஆகும். அங்கு பெண்கள் 10 சதவீதத்திற்கும் குறைவான வணிகங்களை வைத்திருக்கிறார்கள்.

பெண் தொழிலதிபர்கள் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்-Women Entrepreneurs

தொழில் நடத்துவது இளம் பெண்களினால் மட்டுமே சாத்தியமா? இல்லை! சொந்தமாக தொழில் செய்யும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 40 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

Women Entrepreneurs

பெண்களால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் (start-up) ஆண்களின் நடத்தப்படும் ஸ்டார்ட்அப்களை விட  இரண்டு மடங்கு பணம் சம்பாதிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வேலை செய்வதற்கான நேரம் இது உங்களை தயார்படுத்துங்கள், தோழிகளே!

சில நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்கள் அல்லது தொழில்களில் பெண்கள் (Women Entrepreneurs) பின்வாங்கப்படலாம். மேலும் வணிக கலாச்சாரத்தில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவத்தைப் பெற நாங்கள் இன்னும் நிறைய உழைக்க வேண்டி உள்ளது . இருப்பினும். பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்துவதில் சிறந்து விளங்குகிறார்கள்!

Facebook
Twitter
Email
Print

Related article

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்: இலங்கையில் இன்று என்ன வழிகள் திறந்திருக்கின்றன?

இன்று இலங்கையின் பல இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார சிக்கல்கள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் ஆகியவை இளம் தலைமுறையை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளன(Career opportunities).

Read More →
தூக்கமின்றி தவிக்கிறீர்களா? மன அழுத்தத்தை குறைக்கும் இயற்கை வழிகள்

இன்றைய வேகமயமான வாழ்க்கைமுறை, வேலைச்சுமைகள், தனிப்பட்ட சிக்கல்கள் – இவை அனைத்தும் சேர்ந்து நம்மை மன அழுத்தத்தின் பிடியில் இழுத்துச் செல்கின்றன. தூக்கம் வராமை(insomnia), சோர்வு, மூளையின் ஓய்வின்மை, எல்லாம் இதன் விளைவுகளே. மன

Read More →