- டெபிட் அட்டைகளுக்கான மொத்த உள்நாட்டு செலவில், விற்பனை நிலையங்களில் செலவழிக்கும் பங்கு இணையத்தள வர்த்தகத்துடன்ஒப்பிடும்போது விட 7 மடங்கு அதிகம்.
- 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு விடுமுறைக்காலத்தில் Visa டெபிட் பரிவர்த்தனைகளில்(Debit card spends) 20% வளர்ச்சி காணப்பட்டது
கொழும்பு, ஏப்ரல் 02, 2024;டிஜிட்டல் கொடுப்பனவு செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் Visaவானது (NYSE: V), இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டில் Visa டெபிட் அட்டை ஊடான செலவீனங்களில் 35% க்கும் அதிகமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதற்கிணங்க நேரடியாக மேற்கொள்ளப்படும் செலவுகளில் 30%+ அதிகரிப்பும் மற்றும் இணையத்தள வர்த்தகம் ஊடாக மேற்கொள்ளப்படும் செலவுகளில் 40% அதிகரிப்பும் ஏற்பட்டதன் மூலம் மேற்படி 35% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் விற்பனை நிலையங்களில் சில்லறை பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான, எளிமையான மற்றும் வசதியான பரிவர்த்தனையை மனதிற்கொண்டு அதிகளவில் டெபிட் அட்டை மூலம் பணம் செலுத்துகிறார்கள்,
Visaவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிட முகாமையாளர் அவந்தி கொலம்பகே இது தொடர்பாக தெரிவிக்கையில் , “அண்மைக்காலமாக இலங்கையில் நுகர்வோர் டெபிட் அட்டை பாவனையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.மேலும் இணையத்தளம் ஊடான வர்த்தக வளர்ச்சியும் எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது அத்துடன் இந்த வேகமானது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போதும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஆண்டிறுதி விடுமுறையில் டெபிட் அட்டை ஊடான செலவுகளில் 35% க்கும் அதிகமான வளர்ச்சியை நாங்கள் பதிவு செய்துள்ளோம்.இந்த பண்டிகைக் காலத்திலும், அட்டைதாரர்கள் தங்கள் அட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வேகமான பணம் செலுத்துவதற்கான வழிகளை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அட்டை பயன்பாடு மற்றும் அதன் அணுகல் தன்மையை அதிகரிக்கும் வகையில் எங்கள் பங்குதாரர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், இதன் காரணமாக நுகர்வோர் தங்கள் Visa அட்டைகளை எந்த நேரத்திலும் – வசதியாகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.
Visa Consulting & Analytics இன் சமீபத்திய தரவுகள், Visa டெபிட் அட்டைகள் பெரும்பாலும் நேருக்கு நேராக அல்லது வர்த்தக விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகள் போன்ற களஞ்சிய நிலையங்களில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கின்றன.டெபிட் அட்டைகள் ஊடான மொத்த செலவுகளில் , நேருக்கு நேரான விற்பனை நிலையங்களில் செலவழிக்கும் பங்கானது இணையத்தள வர்த்தகமூடான செலவு பங்கினை விட 7 மடங்கு அதிகமாகும். உணவு மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள், எரிபொருள் தொடர்பான விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவையே நுகர்வோர் அதிகளவில் ஷொப்பிங் செய்யும் நிலையங்களாகும். இணையத்தள வர்த்தக செலவுகளில் பெரும்பாலும் தொலைத்தொடர்பு மற்றும் பயன்பாட்டுச் சேவைகள், கல்வி, அரசாங்கக் கொடுப்பனவுகள் மற்றும் காப்புறுதி போன்றவை அடங்குகின்றன. அவந்தி கொலம்பகே தெரிவிக்கையில் , “இது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான மிகவும் பரிச்சயமான, எளிமையான மற்றும் விரைவான வழிகளில் ஒன்றான டெபிட்அட்டைகளின் அதிகரித்து வரும் பாவனையை குறிக்கிறது. நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களிடையே டெபிட் அட்டைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க மேல் மாகாணத்திற்கு அப்பால் பிராந்திய வீதிக்காட்சிகளை உருவாக்க பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இலங்கையர்களிடையே தற்போது நிலவும் இந்த அதிகரித்த டெபிட் அட்டை பயன்பாடு நிலையானது பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் காணப்படுகிறது.அதிகமான வாடிக்கையாளர்கள் பணத்தைப் பயன்படுத்துவதை விட தடையற்ற மற்றும் பாதுகாப்பான கட்டண அனுபவத்தை பெறுவதற்காக அட்டைகளை தெரிவு செய்வதே இந்நிலைமைக்கு காரணம். சுற்றுலாத்துறையின்உறுதியான வளர்ச்சியுடன், சுற்றுலாப் பயணிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்த செலவீனங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, விடுமுறைக் காலத்தில் மொத்த எல்லை தாண்டிய செலவீனங்களில் சுற்றுலாவின் பங்கானது 15 சதவீத புள்ளிகளால் வளர்ச்சியடைந்துள்ளதாக Visa தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அளவு மற்றும் பெறுமதி ஆகிய இரண்டின் அடிப்படையில், சுற்றுலா தொடர்பான செலவுகள் விசா நற்சான்றிதழ்களில் 100% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது”, என அவந்தி கொலம்பகே உறுதிப்படுத்துகிறார்.
இலங்கையில் சுற்றுலா தொடர்பான செலவீனங்களில் 50% அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக Visa மேலும் பகிர்ந்து கொண்டது.சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் தங்குமிடம் மற்றும் சில்லறைப் பொருட்களுக்குச் செலவுகளை மேற்கொண்டுள்ளனர், இது விடுமுறைக் காலத்தில் சுற்றுலாச் செலவீனங்களில் 60%க்கும் அதிகமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டின் எளிமைக்காக டெபிட் அட்டைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்கிறார் அவந்தி கொலம்பகே. Visa தனது வாடிக்கையாளர்களுடன் இணைந்துள்ள நிலையில் மேலும் டெபிட் அட்டைகள் தொடர்பாக வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டது.அத்துடன் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், பணத்தினை
மீளப்பெறும் சலுகைகள் மற்றும் Visa அட்டை வைத்திருப்பவர்களுக்கு விலைக்கழிவு போன்றவற்றையும் செய்துள்ளது. அத்துடன் இலங்கை முழுவதும் Visa அட்டைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
Visa Inc பற்றி; (Debit card spends)
Visa(NYSE: V) என்பது 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள நுகர்வோர், வர்த்தகர்கள் , நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் டிஜிட்டல் முறையிலான கொடுப்பனவுகளை வழங்குவதில் உலகளாவியரீதியில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும் . தனிநபர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொருளாதாரங்கள் செழிக்க உதவும் மிகவும் புதுமையான, வசதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான கட்டண வலையமைப்பின் மூலம் உலகை இணைப்பதே VISAவின் நோக்கமாகும். பொருளாதாரம் என்றால் எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் உள்ளடக்கி மேம்படுத்தி பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கான அடித்தளமாக அணுகச் செய்வதே என நாம் நம்புகின்றோம்.
ஊடக அறிக்கை
தொடர்புகளுக்கு :
உமா பாலகிருஷ்ணன்
ubalakri@visa.com