Leading Tamil women's magazine in Sri Lanka

இயேசுவின் பிறப்பின் மகத்துவம்: தாழ்மையின் மூலம் வந்த மீட்பு

டிசம்பர் முதலாம் தேதியிலிருந்து வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டுப், கிறிஸ்துமஸ் (Christmas) மாதத்தின் வரவைக் கொண்டாட தொடங்குகிறோம். இது வெறும் பண்டிகையல்ல; இது நம் உள்ளங்களையும் சுத்தப்படுத்தும் தருணம். வீட்டை ஒழுங்குபடுத்தும் போல் நம் மனதையும் சுத்தப்படுத்த வேண்டிய நேரம் இது. கிறிஸ்து பிறக்கப்போகும் மனத் தொழுவத்தைத் தயார் செய்வோம்.

இன்று நாம் இயேசுவின் பிறப்பின் மகத்தான நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

மரியாளுக்கு தேவதூதர் காபிரியேலின் அறிவிப்பு

ரோமப் பேரரசின் கீழ் இருந்த கலிலேயா நாட்டின் நாசரேத் என்ற சிறிய ஊரில், எளிய குடும்பத்தைச் சேர்ந்த மரியாள் என்ற கன்னிப்பெண்ணிடம் தேவதூதர் காபிரியேல் தோன்றினார். “கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவளே, வாழ்க! உனக்கு கடவுளின் அருள் கிடைத்துள்ளது” என்று அவர் கூறினார். மரியாள் குழப்பமடைந்து, அதற்கு விளக்கம் கேட்க, தேவதூதர் சொன்னார்: “மரியாளே, பயப்படாதே! நீ கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; அவருக்கு இயேசு என்று பெயர் வைக்க வேண்டும். அவர் கடவுளின் மகன் என அழைக்கப்படுவார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது.”

மரியாள், “இது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டபோது, தேவதூதர் விளக்கினார்: “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; அதனால் பிறப்பது பரிசுத்தமானது; கடவுளின் மகன் என்று அழைக்கப்படும்.”

மரியாள் இறுதியாக, “நான் கடவுளின் அடிமை; உங்கள் வார்த்தை என்னில் நிறைவேறட்டும்” என்று முழுமையாக ஒப்புக்கொண்டார்.

எலிசபெத்திடம் மரியாளின் பார்வை

மரியாள் தேவதூதரின் செய்தியை உறுதிப்படுத்த, யூதாவின் மலைப்பகுதியில் வாழ்ந்த எலிசபெத்திடம் சென்றார். மரியாள் வாழ்த்துக்களைச் சொன்னவுடன், எலிசபெத்துடைய வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியில் துள்ளியது. எலிசபெத் மரியாளிடம் கூறினாள்: “நீ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்; உன் வயிற்றிலுள்ள குழந்தையும் ஆசீர்வதிக்கப்பட்டவன்!”

யோசேப்பின் மனக்குழப்பம்

மரியாள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த யோசேப்பு, நல்மனம் கொண்டவர் என்பதால் மரியாளை ரகசியமாக விவாகரத்து செய்ய நினைத்தார். ஆனால் இறைத்தூதர் யோசேப்புக்கு கனவில் தோன்றி, “மரியாளை மணமாக்கவிழியுங்கள்; அவர் கருவில் இருந்தது பரிசுத்த ஆவியினால்” என்று கூறினார். இதை நம்பிய யோசேப்பு, மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

Christmas

பெத்லகேமுக்கான பயணம்

அகுஸ்து பேரரசரின் உத்தரவின்படி, வரி பதிவு செய்ய யோசேப்பும் மரியாளும் தாவீதின் நகரமான பெத்லகேமுக்கு சென்றனர். நீண்ட பயணத்தின் பிறகு, அவர்கள் தங்குவதற்கு இடமில்லாமல், ஒரு மாட்டுக்கொட்டகையில் தங்கினர். அங்கு மரியாள் இயேசுவைப் பெற்றார். உலகத்தை மீட்க வந்த மீட்பருக்கு கிடைத்த இடம் எளிய கொட்டகைதான்.

இடையர்களுக்கு அறிவிப்பு

முதலில் இயேசுவின் பிறப்பை அறிவிக்கப் பெற்றவர்கள் இடையர்கள்தான். அவர்களிடம் தேவதூதர் தோன்றி, “இன்று உங்களுக்கு ஒரு மீட்பர் பிறந்தார்; அவர் கிறிஸ்து ஆண்டவர்” என்று கூறினார். இது இடையர்களுக்கு மட்டுமல்ல; எளிய மக்களுக்கு விடுதலையின் செய்தி.

இம்மானுவேல்: இறைவன் நம்மோடு

“இம்மானுவேல்” என்றால் “இறைவன் நம்மோடு” என்று பொருள். இந்த பெயர் கிறிஸ்துமஸின் மெய்யான செய்தியை எடுத்துக்காட்டுகிறது. நாம் ஒருபோதும் தனியாக இல்லை; இறைவன் எப்போதும் நம்மோடு இருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ், நம் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இறைவனின் ஒளி நிரம்பிடச் செய்வோம்.

கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு

கிறிஸ்துமஸ் மரமும் பண்டிகையின் ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. ஜெர்மனியில் புனித போனிபேஸ் என்ற பாதிரியார் ஓக் மரங்களை வழிபடுவதைக் கண்டும் கண்டுகொண்டு, அதை இயேசுவின் உயிர்த்தெழுதலின் அடையாளமாக மாற்றினார். பச்சை மரங்கள், அழிவற்ற வாழ்வின் அடையாளமாக உள்ளன.

முடிவு

கிறிஸ்துமஸ் என்பது பண்டிகையைத் தாண்டி, ஆன்மிக மறுமலர்ச்சிக்கும் கடவுளுடனான இணைப்புக்கும் ஒரு காலமாகும். இயேசுவின் பிறப்பு, இறைவனின் அன்பையும் நம்பிக்கையையும் நினைவூட்டுகிறது. இந்த கிறிஸ்துமஸில், “இறைவன் நம்மோடு” என்ற ஒளியை நம் வாழ்க்கையில் ஏற்றிக்கொள்வோம்.

Facebook
Twitter
Email
Print

Related article

த்ரில்லர்
லெவன்– சீரியல் கில்லர் த்ரில்லர் (Thriller) : ஒரு விரிவான விமர்சனம்

சென்னையின் இரவு மர்மம்! (eleven)முகமூடி அணிந்த மர்மமான கொலைகாரன் நகரம் முழுவதும் த்ரில்லர் கொலைகளைத் தொடர்ந்து செய்கிறான். அடையாளம் தெரியாமல் சடலங்களை எரிக்கிறான். இதனால் போலீஸாரை சிரமமாக்கும் அவன் செய்கைகள், படத்தின் முதல் அம்சமாகவே

Read More →
மாதவிடாய்
இளம் வயதினருக்கு மாதவிடாய் காலத்தை கடந்து செல்ல விழிப்புணர்வே முக்கியம், பிலியந்தல சர் ஜான் கொத்தலாவல மகா வித்தியாலய ஆசிரியை புத்திமதி ஹெட்டியாரச்சி

பிலியந்தல சர் ஜான் கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை திருமதி புத்திமதி ஹெட்டியாரச்சி, பள்ளிகளில் நடாத்தப்படும் மாதவிடாய் விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். அவ்வாறு பணியாற்றி வரும் அவர், இலங்கையில் மாதவிடாய் கால

Read More →