Leading Tamil women's magazine in Sri Lanka
Visa Accelerator

Visa Accelerator நிகழ்ச்சித் திட்டம் 2024 தற்போது இலங்கையில்உள்ள Fintechs இடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது.

Visa Accelerator

திட்டத்தின் நான்காவது பதிப்பு, எதிர்கால கொடுப்பனவுகள் மற்றும் வர்த்தக சவால்களைத் தீர்க்க ஆரம்ப கட்ட வளர்ச்சி நிலையில் இருக்கும் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்களைகோருகிறது.

கொழும்பு, ஜனவரி 29, 2024:டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் Visa (NYSE: V), விண்ணப்பங்களுக்கான திறந்த அழைப்புடன் Visa விரைவுப்பொறி[Visa Accelerator] நிகழ்ச்சி திட்டத்தின் நான்காவது பதிப்பை இன்று அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. Visa வின் கொடுப்பனவு நிபுணர்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் , இலங்கையில் அபிவிருத்தியின் ஆரம்பத்தில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்திவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.. 2024 பதிப்பு புதிய வாய்ப்புப் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது – அதாவது செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய பண நகர்வு மற்றும் ,நுண்ணிய , சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கான டிஜிட்டல் ரீதியிலான ஏற்றுக்கொள்ளல் (MSMBs) மற்றும் உட்பொதிக்கப்பட்ட நிதி போன்ற செயற்பாடுகளில் எதிர்காலத்துக்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்தல் போன்றவற்றில் தனது கவனத்தை செலுத்துகிறது.

இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பேசிய Visa வின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிராந்திய முகாமையாளர் அவந்தி கொலம்பகே, “நாட்டிற்கு வரவிருக்கும் கட்டண புதுமைகளை Visa விரைவுப்பொறி(Visa Accelerator) திட்டத்திற்கு அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் Visa மூலம் அவற்றின் தீர்வுகளை மேம்படுத்துகிறோம். இந்த திட்டம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலுள்ள நிறுவனங்களுக்கு [startups] நிஜ உலக வாய்ப்புகள் மூலம் அவர்களின் தீர்வுகளை மேம்படுத்தவும் சோதனை செய்யவும், வளர்ச்சிக்கான வேக நிலையைஉருவாக்கவும், எங்கள் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. சாதகமான கொடுப்பனவு அனுபவங்கள் மூலம் தடையற்ற, பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை செயல்படுத்துவதன் ஊடாக உலகளாவிய கொடுப்பனவுகளுக்கான அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

”முக்கிய விரிவாக்க கட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், தயாரிப்புகளுக்கான தீர்வு மற்றும் விரைவான வணிக மயமாக்கல், சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் விரைவான வளர்ச்சியுடன் இந்நிறுவனங்களை மேம்படுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்களின் குழு, இந்த திட்டத்தின் ஊடாக, கொடுப்பனவுகளுக்கான சூழல் முறைமையில் வளர்ந்து வரும் சவால்களை எடுத்தியம்பும். அத்துடன் அவர்கள் இணை அபிவிருத்தி, சோதனை,மற்றும் புதிய தீர்வுகளை செயற்படுத்துவதுடன் மற்றும் நிதி நிறுவனங்கள்,
வர்த்தகர்கள் மற்றும் டிஜிட்டல் பங்காளர்கள் Visa வின் விரிவான வலையமைப்பைப்
பயன்படுத்தி உறுதியான சந்தைக்குச் செல்லும் வாய்ப்புகளைத் தொடரலாம்.

இந்தத் திட்டத்தின் இந்தப் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 8, 2024 அன்று முதல் கோரப்பட்டுள்ள நிலையில் , இவற்றின் முடிவு திகதி மார்ச் 8, 2024 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரம்ப நிலை நிறுவனங்கள் மே முதல் நவம்பர் 2024 வரை இத் திட்டத்தில் ஈடுபடுவதுடன் இது பின்னர் செய்முறை தினத்துடன் முடிவடையும். 2020 இல் தொடங்கப்பட்ட Visa விரைவுப்பொறி திட்டம், அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள், அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் முன்னேற்றகரமான நிறுவனங்களின் ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டு வருவதுடன் முதலீட்டு வாய்ப்புகளுக்காக திறந்துள்ளது.

ஆர்வமுள்ள ஆரம்பநிலை நிறுவனங்கள் – மேலும் தகவல்களை பெற்றுக்கொள்ளவும் மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் www.visa.com.sg/apaccelerator எனும் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

Visa பற்றி(Visa Accelerator)

Visa Accelerator


Visa (NYSE: V) 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள நுகர்வோர்,
வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு இடையேயான
பரிவர்த்தனைகளை எளிதாக்கும் டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான உலகளாவிய முன்னணி நிறுவனமாகும்.தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் செழிக்க உதவும் மிகவும் புதுமையான, வசதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவு வலையமைப்பு மூலம் உலகை இணைப்பதே எங்கள் நோக்கம். எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரங்கள், எல்லா இடங்களிலும் உள்ள அனைவரையும் மேம்படுத்துவதுடன் பண நகர்வின் எதிர்காலத்துக்கான அணுகலை அடித்தளமாக கொண்டு செயற்பட முடியும் எனவும் நம்புகிறோம்(Visa Accelerator). மேலும் தகவல்களுக்கு Visa.com இனை நாடவும்.

ஊடக தொடர்பு:
Ubalakri@visa.com

Facebook
Twitter
Email
Print

Related article

த்ரில்லர்
லெவன்– சீரியல் கில்லர் த்ரில்லர் (Thriller) : ஒரு விரிவான விமர்சனம்

சென்னையின் இரவு மர்மம்! (eleven)முகமூடி அணிந்த மர்மமான கொலைகாரன் நகரம் முழுவதும் த்ரில்லர் கொலைகளைத் தொடர்ந்து செய்கிறான். அடையாளம் தெரியாமல் சடலங்களை எரிக்கிறான். இதனால் போலீஸாரை சிரமமாக்கும் அவன் செய்கைகள், படத்தின் முதல் அம்சமாகவே

Read More →
மாதவிடாய்
இளம் வயதினருக்கு மாதவிடாய் காலத்தை கடந்து செல்ல விழிப்புணர்வே முக்கியம், பிலியந்தல சர் ஜான் கொத்தலாவல மகா வித்தியாலய ஆசிரியை புத்திமதி ஹெட்டியாரச்சி

பிலியந்தல சர் ஜான் கொத்தலாவல மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியை திருமதி புத்திமதி ஹெட்டியாரச்சி, பள்ளிகளில் நடாத்தப்படும் மாதவிடாய் விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர். அவ்வாறு பணியாற்றி வரும் அவர், இலங்கையில் மாதவிடாய் கால

Read More →