Leading Tamil women's magazine in Sri Lanka

AB Mauri Lanka 3 புதுமையானவெதுப்பக தயாரிப்புகளை CAFÉ 2024 சமையல்கலை உணவு கண்காட்சியில் அறிமுகப்படுத்துகிறது.

கொழும்பு,இலங்கை 21 மே 2024; ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட அசோசியேட்டட் பிரிட்டிஷ் ஃபுட்ஸ் பிஎல்சிக்கு [Associated British Foods PLC] சொந்தமான AB Mauri Lanka, CAFE 2024 Culinary Art Food Expo இல் 3 புதுமையான தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு BMICH இல் நடக்கவிருக்கும் சமையல் கலை கண்காட்சியான CAFE 2024 இல் இம்மூன்று புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொருவெதுப்பக உள்ளடக்கமும் வணிக மற்றும் கைவினைஞர் வெதுப்பகர்களின் வாய்ப்புகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை vegan baking,முட்டை மாற்றீடு , மற்றும் புகழ் பெற்ற sourdough சுவையூட்டிகளை கொண்டதாக அமைந்திருக்கும்.

AB Mauri Lanka


உணவுக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் வெதுப்பகர்கள் , FOVO சைவ உணவு மற்றும் முட்டை மாற்றீடு, அரோமாஃபெர்ம் தானிய நொதித்தல் மற்றும் பன் நெகிழ்வடைவதற்கான வேகா பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும். AB Mauri Lanka பிரதிநிதிகள் மேற்படி தினங்களில் காலை 10 மணி முதல்
மாலை 7 மணி வரையில் இருப்பார்கள். கண்காட்சி கூடங்கள் 66-68 இல் , ‘வெதுப்பகத்துறையின் எதிர்காலத்தை அனுபவிக்க ஒரு அழைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் தங்கள் சலுகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ள
முடியும்.


“எங்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தை ஆராயவும், சிறந்த பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உருவாக்குவதில் எங்கள் புதிய தயாரிப்புகள் எவ்வாறு அவர்களுக்கு உதவ முடியும் என்பதைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வெதுப்பக மற்றும் சமையல் நிபுணர்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று AB Mouri லங்காவின் வதிவிடப் பணிப்பாளர் சுராஜ்தீன் செய்யத் தெரிவித்தார். “உள்நாட்டு மற்றும் பிராந்திய வெதுப்பகர்களுக்கு அற்புதமான முன்னேற்றங்களை அனுபவிப்பதற்கும் எங்கள் தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும், அத்துடன் இதன்மூலம் வெதுப்பக நுட்பங்கள் மேம்படுத்தப்படுகின்றன.


FOVO முட்டை மாற்றீட்டு வரிசை உற்பத்திகள் மிகவும் செயல்பாட்டு தீர்வுகளை வழங்குகின்றன.இதற்கிணங்க இதில் பூர்த்தி செய்யப்பட்ட பேக் செய்யப்பட்ட தயாரிப்புகளில் முட்டைகளை கணிசமாக குறைக்கலாம் அல்லது முழுமையாக மாற்றலாம். இந்த புதுமையான செயற்பாடானது ருசியான மற்றும் மகிழ்ச்சியான தயாரிப்புகளின் தேவையை நிவர்த்தி செய்வதுடன் மட்டுமல்லாது கால்நடைகளின் நலன் , சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் கார்பன் தடத்தைக் குறைத்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. FOVO தயாரிப்பு வரிசைகளில் பேக்கிங் பவுடருடன் அல்லது இல்லாமல் கிடைக்கும் FOVO கேக் சமையல் குறிப்புகளில் 100 சதவீத முட்டை உள்ளடக்கத்தை மாற்றும் திறன் கொண்ட முட்டை மாற்றீடும் அடங்கும்.


புதிய Aromaferm தொகுதிகள் , wheatgerm, durum மற்றும் rye ferments ஆகிய 3 தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. இந்த முறையில் , பெரிய மற்றும் சிறிய வெதுப்பகங்களுக்கு இயற்கை நொதித்தலுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். புளிக்கவைக்கப்பட்ட கோதுமை துணைப் பொருட்களிலிருந்து பெறப்படும் இந்த இயற்கையான புளிப்பு, artisanal, sandwich & Mediterranean-style breads, baguettes, pizza crusts உள்ளிட்ட பல வெதுப்பக பொருட்களைத் தயாரிக்க ஏற்றது. இதன் மூலம் இந்த தயாரிப்புகளின் சுவை, மென்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன.


பண்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, பண் மீள் திறன் தயாரிப்பு அனைத்துவகைகளிலும் கிடைக்கிறது. மென்மையான, இந்த தயாரிப்பு ஒரு இனிமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவை கொடுக்கும் மேல்பகுதியை கொண்டது. வேகா தொழில்நுட்பத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட இந்த வெதுப்பக தயாரிப்புகள் விநியோகத்திற்கு உகந்தவை.


AB Mauri Lanka: பற்றி:


AB Mauri Lanka அசோசியேட்டட் பிரிட்டிஷ் ஃபுட்ஸ் பிஎல்சியின் கீழ் இயங்குகிறது.ஐக்கிய இராச்சியத்தினை தளமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற உலகளாவிய பேக்கரி மூலப்பொருள் உற்பத்தியாளரான அசோசியேட்டட் பிரிட்டிஷ் ஃபுட்ஸ் பிஎல்சி 32 க்கும் மேற்பட்ட நாடுகளில் 52 தொழிற்சாலைகளை

இயக்கி, குறிப்பிடத்தக்க சர்வதேச இருப்பை பராமரிக்கிறது. ஒரு விரிவான சர்வதேச வலையமைப்புடன், AB Mauri Lanka, உலகளவில் நம்பகமான உயர்தர மூலப்பொருட்களை வழங்குவதன் மூலம் இலங்கை வெதுப்பக தொழிற்துறையை வலுவூட்டுவதில் உறுதியாக செயற்படுகிறது. மேலும் தகவல்களை https://www.abmauri.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்..

Facebook
Twitter
Email
Print

Related article

இயற்கையாக முகத்தை நிரந்தரமாக வெண்மையாக்க வேண்டும்? இதோ வழி!

பெண்கள் தங்களை naturally அழகாக பராமரிப்பது என்பது மிகவும் பாரம்பரியமானதும் முக்கியமானதும். அது வெறும் அடக்கங்காப்பு அல்ல – அது ஒரு தன்னம்பிக்கை, ஒரு ஆரோக்கிய மனநிலை. இதில் முகம் என்பது பெரும்பாலும் முதல்

Read More →
இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள்: இலங்கையில் இன்று என்ன வழிகள் திறந்திருக்கின்றன?

இன்று இலங்கையின் பல இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை தேடிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார சிக்கல்கள், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான முன்னேற்றம் ஆகியவை இளம் தலைமுறையை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளன(Career opportunities).

Read More →